உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் 7

யைத் தன் உயிராகவும், மனைவாழ் மகளிர் தாம் கொண்ட கொழுநரைத் தம் உயிராகவும் கொண்டு இலங்குகின்றனர். -

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிர்.

(குறுந் 135; 1-2.)

இப்படி ஒருவர்க்கொருவர் உயிராகத் திகழ்கன்ற தன்மை யினால்தான் அவர்தம் இல்லறம் இனிய இல்லறமாகக் காட்சியளிக்கின்றது.

செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி இன்றுவரல் உரைமோ சென்றி.சினோர் திறத்தென இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் காணுடை அரிவை...... # * * * * * * * =

(அகம். 33 : 14-18.)

தன் குடும்பத்தினரும் தன் கவலையை அறிதல் வேண்டா என்ற உள்ளப் பண்பாட்டுடன் மெல்லிய குரலிலேகுயிலைப் பழிந்த மோகனக் குரலிலே- ஒரு நானுடை அரிவை மொழி பயிற்றுவதை வெளிப்படுத்தி நிற்கும் இவ் அகநானுாற்றுப் பாடல், வீட்டு வாழ்வின் விழுமிய நிலையினை உள்ளங்கை நெல்லிக் கனி எனக் காட்டுகிறது.

மற்றுமொரு காட்சி : பொருள்வயிற் பிரிந்துசென் 1)ான் திண்தோளனாகிய தலைமகன். கார்காலத்தில் ருெம்பி வருவதாக வாக்களிந்துவிட்டுத் தலைவியிடம் விடைபெற்றுச் செல்கின்றான் அவன்.கார்காலமோநெருங் கிறது. தலைவியோ துாண்டிற் புழு வெனத் துடிக்கிறாள். லைவனோ கார்காலம் வருவது உணர்கிறான் ஆயினும் அவன் மேற்கொண்ட செயல் முடியவில்லை. செய்வன ருெந்தச் செய்யும் தன்னிகரற்ற தலைவனன்றோ, அவன்!