உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தண்ணீர்ப் பந்தல்

9

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்ருனும்-உண்ணுநீர்க்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா வுடம்பெய்தி னார்.

இனிப் புனற்பந்தர் வைத்தவர் மறுமையில் சிவ லோகத்தில் உறைவர் என்று திருவிளையாடற் புராணம் சிவலோகம் காட்டிய படலம் கூறும் :- -

முக்கண் நாயகன் பொருட்டென வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர்; புனற்சாலை இத்தொடக்கத்
தக்க பேரறம் புகழ்பயன் றமைநன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையாற் புரிந்தவர் இவர்காண்.