உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. தத்தா நமரே காண்

மெய்ப்பொருளார் மாண்பு

'மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்' என்று சிவ நெறியின் கண் ஒழுகியவர் மெய்ப்பொருள் நாயனார். இவர் திருக்கோவலூரில் வாழ்ந்த மிலாடர் கோமான் ; அன்பர் வேடமே சிங்தை செய்தவர்; திருக்கோயில்களில் பூசை விழா முதலியன புரிந்து வாழ்ந்தவர் ; " தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும்” என்று அடியார்களுக்குக் குறைவறக் கொடுத்தவர்.

முத்தநாதன் பகைமை

இவர்க்கு முத்தநாதன் என்ற ஒரு சிற்றரசன் பகைஞனாயிருந்தான். அவன் மெய்ப்பொருள் நாயனாரோடு பலமுறை போர்புரிந்து தோற்றான் ; நாயனாரை இகலினால் வெல்ல முடியாது என்பதை அறிந்தான் ; திருவேடந்தாங்கிச் சென்று வஞ்சனையால் வெல்லக் கருதினான்; மெய்யெல்லாம் நீறு பூசினான்; கையினிற். படைகரந்த புத்தகக் கவளி ஏந்தினான்; நாயனாரின் மாளிகையை அடைந்தான்.

முத்தங்நாதன் நினைத்த அப்பரிசே செய்தல்

திருவேடப் பொலிவழகு கண்ட காவலாளிகள் இவ்வஞ்சகனை அரண்மனையில் விடுத்தனர். நாயனார் இருந்த அறையிடத்துச் சென்றான் முத்தநாதன். அங்குத் தத்தன்