உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தாதியில் சுந்தரர்

17


தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ் சோதிசென்று எழுதும்தமிழ்ப்பழஆவணம்காட்டி, 'எனக்குஉன்குடி(ஆங்கு முழுதும்.அடிமை, வந்து ஆட்செய்' எனப்பெற்றவன்முரல்தேன் ஒழுகு மலரின் நல் தார் எம்பிரான் நம்பி ஆரூரனே.

பரவையாரும் சங்கிலியாரும்

சுந்தரர் திருவாரூரில் பரவையாரையும், திருவொற்றியூரில் சங்கிலியாரையும் வாழ்க்கைத் துணையாகக்கொண்டார் என்பது 'பரவை யென்னும் மாதுக்குக் காந்தன் வன்றொண்டன்' (39), 'சங்கிலி பேரமைத்தோள் அணையுமவன் திருவாரூரன் ஆகின்ற அற்புதனே' (40) என்ற வற்றுள் குறிக்கப்பெற்றது. சங்கிலியாரை மணம் பேசவந்தவர் இறந்தார் என்பதும், சுந்தரர் சங்கிலியாரை மணந்தது இறைவன் உதவியினாலேயே என்பதும் பின்வரும் (69 ஆம்) பாடலிற் காணலாம் :---

தருமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலி னால்ஒற்றி யூர்உறை புண்ணியன்றன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம் நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூரரசே,

'நூல்போன’ என்பது 'நூற்றுறையில் புகழப்பட்ட என்று பொருள்படும். கற்றுத்துறைபோய எனினும் ஆம்.

'துணையும் அளவும் இல்லாதவன் தன்னருளே துணையாக... சங்கிலி தோள் இரண்டும் அணையுமவன் ' [40]

என்ற பாடற் பகுதியும் இறைவன் திருவருட்டுணை யாலேயே இத்திருமணம் நிகழ்ந்தது என்பதை வலியுறுத்தும்.

2