உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இலக்கியக்கேணி


அற்புத நிகழ்ச்சிகள்

புகலுரில் செங்கல் பொன்னாகப் பெற்றது - 'வன்றொண்டர் அம்பொன் அதிகம் பெறும் புகலூர்' (18) தென்புகலூர் அரன்பால் செம்பொன் கொள்ளவல்லான்’ (57) என்ற பாடற் பகுதிகளாலும், திருப்பதிகம் பாடித் திருவருளால் காவிரி வழிவிட்ட அற்புதம்-'செந்தமிழ் பாடிப் படர் புனலிற் சிந்திப்பரியன சேவடி* பெற்றவன்’ (32) என்றதாலும், ஆற்றில் இட்ட பொன் குளத்தினிற் பெற்றது-

செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப் பொழிநீ டருதிரு வாரூரில் வாசியும்பொன் னுங்கொண்டோன் கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே

என்ற 77 ஆம் திருப்பாடலாலும், முதலையுண்ட பாலனை யழைத்தது-

     'கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் 
          குயிர் அன்று புக்கொளியூர்த் 
      தொடுத்தான் மதுரகவி அவிநாசியை' (63)

என்பதாலும், திருமுருகன் பூண்டியில் சிவகணங்கள் கொள்ளையடித்தமை-'வேடர் சுற்றம் படுத்தான்+ திருமுருகன் பூண்டியினில்' (68) என்பதாலும் அறியலாம். திருவொற்றியூரினின்று வரும் சுந்தரர் சோழ நாட்டுத் திருத்துருத்தி எனும் தலத்தருகே வந்த பொழுது புதிய ஒரு பிணியின் அறிகுறி காணப்பட்டது என்றும், தான் முன் செய்த சபதத்தைப் பிழைத்தமையால் இப்பிணி


  • சேவடி-திருவருள். + படுத்தான்-பறிக்கப்பட்டான்.