பக்கம்:இலக்கியக் கேணி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இலக்கியக்கேணி


மழபாடி மன்னும் மணாளர்" என்றும், "மழபாடி வயிரத்துண்" என்றும் பாடியிருக்கிறார். சம்பந்தர், கனவயிரத்திரள் என்று பாடியுள்ளார். சுந்தரர், பொன்னார் மேனியன்' என்றதற்கேற்பத் திருநாவுக் கரசரும், "பொன்னியலும் திருமேனி" என்று மழபாடித் திருத்தாண்டகத்தில் பாடியருளினார்.

பொன்னார் மேனியன் திருமேனி

"பொன்னுர் மேனியன்" என்ற தொடர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சேனாதிபதியின் மனத்தைக் கவர்ந்தது. அவர் சேனாபதி அரையன் கடக்கங் கொண்ட சோழன் அணிமுரி நாடாழ்வான் எனப் பெற்றார். அவர் 1051-1068 இல் அரசாண்ட இரண்டாம் இராசேந்திரன் என்ற சோழப் பேரரசரின் படைத் தலைவர்; முதல் இராசேந்திரனின் அணுக்கியர் ஐயாறன் செம்பொன் தங்கைக் கூத்தன் உத்தம சீலியார் என்பவரின் மகனார் ஆவர்; திருவையாற்றைச் சார்ந்தவர். அவர் திருமழபாடி கோயிலில் செம்பு தராவால் " பொன்னர் மேனியன் " என்று ஒரு திருமேனியை எழுந்தருளுவித்து, அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிபந்தம் அளித்ததோடு சில அணிகலன்களையும் அளித்தார்."

நாள் வழிபாட்டிற்கு நாள் ஒன்றுக்கு நெல் துாணிப் பதக்காக நாள் 360 க்கு நெல் 180 கலம் ; வேலி நூறு கலம் வீதம் வேண்டிய நிலம் 1 3/4; வேலி 1 மா. இதன் விலையாக 70 காசு கோயில் பண்டாரத்துக்குக் கொடுக்கப்பெற்றது; நாள் வழிபாட்டிற்கும் திட்டம் வகுக்கப்பெற்றது.

. 2 S.I.I. Vol V No. 644.