பக்கம்:இலக்கியக் கேணி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னார் மேனியன்

33

அப்பெற்ற அணிகலன்கள்

திருக்கழுத்துக்குச் சாத்த முத்துவடம், முத்தின் , திருக்காதில் சாத்தும் கொள்கை, திருக்கைக்காறை, திருவடிக்காறை, முத்துக் குடை, செம்பில் பொன் பூசின மகுடம் முதலியன.

இங்ஙனம் இச்சேனாதிபதி அளித்ததிலிருந்து, இவர் சிவபெருமானிடத்தும் சைவசமய குரவரிடத்தும் பேரன்பு உடையவர் என்று அறிகிறோம்.

பொன்னார்மேனி பட்டர்ள

"பொன்னார் மேனி" என்ற தொடர் அக்காலத்து மக்களும் தம்பெயராகக் கொண்டிருந்தனர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுள்ளது. கோச்சடையபன்மரான நிருபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரது 8-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று பொன்னார் மேனி பட்டன் என்ற ஒருவரைப் பற்றிக் கூறுகின்றது. நிருமழபாடியுடையார் கோயில் ஆரியக் கண்காணி எதிரொப்பிலாதானான சுந்தரபட்டன் என்று ஒருவர் இருந்தார்; இவரையே முதுகண்ணாகவுடைய இவர் அண்ணன், பெருமாள் பிள்ளையான அருளாளிபட்டன் என்ற பெயருடையவர்; அவர் மகன் பெயர் பொன்னார் மேனி பட்டன் என்பது ஆகும். இவரது தாய் உமையாண்டாள் என்ற பெயருடையவள். இம்மூவரும் திருமழபாடியுடைய நாயனார்க்குத் திருமஞ்சனப் புறமாக எடுத்தபாத நல்லூரில் ஒரு கமுகங் தோட்டத்தை அளித்தனர்.

3 S.I.I. Vol V No. 649.

4 முதுகண்-உசாத்துணையாக இருந்து ஒழுக்க முறைகளைப் போதிப்பவர்.
3