பக்கம்:இலக்கியக் கேணி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்


ஆசிரியர்: இப்பிள்ளைத் தமிழின் ஆசிரியர் பகழிக் கூத்தர். இவர் தந்தை தர்ப்பாதனர். செம்பி நாட்டுச் சன்னாசிக் கிராமத்தவர். சன்னாசிக்கிராமம் என்பது சேது சமஸ்தானத்தைச் சார்ந்த ஒர் ஊர்.இவர் வைணவ மரபினர். இதனை இந்நூல் சிறப்புப் பாயிரச் செய்யுளால் அறியலாம். அப்பாடல் வருமாறு:-

செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழும்
கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான்-அந்தேர்
திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகற் கன்பு
தருமால் பகழிக்கூத் தன்.

நூல்பாடிய வரலாறு: பகழிக் கூத்தர் ஒரு சமயம் வயிற்று நோயால் பெரிதும் வருந்தினார்; மந்திரம் மருந்து ஆகிய எவற்றாலும் நோய் நீங்கவில்லை; திருச்செந்தூரை அடைந்தார்; செந்திப்பதிபுரக்கும் செவ்வேள்மேல் இப்பிள்ளைத் திமிழைப் பாடினார்; நோய் நீங்கியது.

நூல் அரங்கேற்றம்: இந்நூல் செந்தில் வேலவர் சந்நிதியில் அரங்கேற்றப் பெற்றது. அவையினர் இந்நூலைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி எய்தினர்; பிள்ளைத் தமிழின் சொல் நயம் பொருள் நயங்களைக் கேட்டு வியந்தனர்: பற்பல சந்தங்கள் கொண்ட பாடல்களைக் கேட்டு விம்மிதம் எய்தினர். எனினும் இப்புலவர் பெருமான் மரியாதை செய்யப் பெறவில்லை ! புலவர் இதனைப்