உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்

39

சிற்றாராய்ச்சி

முருகப் பெருமான்: அயன் பிரணவத்தின் பொருளைப் புகலாததால் முருகன் அயனைச் சிறைப்படுத்தியது, அஞ்சத் திருக்குமயன் 'அஞ்சச் சிறைக்குளிடு மப்பா' (செ. 90) என்ற விடத்துக் கூறப்பட்டது. இன்னும் இப்பாடலில் முருகனைப் பொதிகை மலேக்குரியவன் என்பதைப் பண்டைக் குடத்திலுறுமுண்டச் சிறுத்த முனி பற்ருசையுற்று மிகவாழ் சந்தப் பொருப்பிறைவ என்றும், 'சங்கத் தமிழ்ப் புலவன்' என்றும் ஆசிரியர் குறித்துள்ளார்.

முருகன் திருவவதார வரலாறு செய்யுள் 43இல் கூறப்பெற்றது. அது வருமாறு :-

        கலைப்பால் குறைத்த பிறைமுடிக்குங்
            கடவு ளுடலின் விளேபோகம்
         கனலி கரத்தி லளிக்கவந்தக்
             கனலி பொறுக்க மாட்டாமல்
       மலைப்பால் விளங்கும் சரவணத்தில்
            வந்து புகுத வோராறு
         மடவார் வயிறு சூலுளேந்து
             மைந்த ரறுவர்ப் பயந்தெடுப்பக்
       கொலைப்பால் விளங்கும் பரசுதரன்
           குன்றி லவரைக் கொடுசெல்லக் 
         கூட்டி யணைத்துச் சேரவொரு
            கோல மாக்கிக் கவுரிதிரு