உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இலக்கியக்கேணி


     முலைப்பால் குடித்த கனிவாயால்
         முருகா முத்தந் தருகவே 
     முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
         முதல்வா முத்தந் தருகவே.

செய்யுள் 37 இல் 'சிவ மழ விடை' யென்றும், செய்யுள் 44 இல் 'சமய மனத்தினுக்கும் முதல்வர்' என்றும். செய்யுள் 47 இல் 'குறுமுனிக்குத் தமிழுரைக்கும் குழவி' என்றும், செய்யுள் 99 இல் 'சடாக்ஷர' என்றும் முருகப் பெருமான் பேசப்படுகிறார்.

முருகப் பெருமானது ஆறுபடை வீடுகளும் 80ஆவது பாடலில் கூறப்பெற்றது :

     அறந்தரு புரந்தரா தியருலகி லரமகளி
        ராடுமணி யூசல் சிற்றில் 
     அம்மனே கழங்குபல செறியுந் தடஞ்சாரல்
        அருவிபாய் பரங்கிரியுமுட் 
    புறந்தரு புனிற்றுவெள் வளைகடற் றிரைதொறும்
        பொருதசீ ரலைவாயு மென்    
    போதுகமழ் திருவாவி னன்குடியு மரியமறை
         புகலுமே ரகமு மினிமைக்
    குறந்தரு கொடிச்சியர் பெருங்குரவை முறைகுலவு
         குன்றுதோ ருட லுந்தண்  
    கொண்மூ முழங்குவது கண்டின மெனக்காட
         குஞ்சரம் பிளிறு மரவஞ்
    சிறந்தபழ முதிர்சோலை மலேயும் புரந்த நீ
         சிறுபறை முழக்கி யருளே 
    செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
         சிறுபறை முழக்கி யருளே.