பக்கம்:இலக்கியக் கேணி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இலக்கியக்கேணி


புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேல் சிலரைப் புலவரெனச் செப்புதல் வீண் எனக் கருதினர்; அவருடைய குறளையும் குறட் கருத்துக்களையும் ஒல்லும் வாயெல்லாம் தம் நூலுட் சேர்த்துக் கொண்டனர்; " பொய்யில் புலவன்" என்று புகழ்ந்தனர்; "பொருளுரை" என்றும், "அறம்" என்றும் திருக்குறளுக்குப் புதிய பெயர் களைச் சூட்டினர்; "பாவிற்கு வள்ளுவர் வெண்பா" என்று பாடினர்; "வள்ளுவர் முப்பால் மதிப்புல வோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு" என்று புகன்றனர்; "எல்லாப் பொருளும் இதன்பாலுள" என மதிப்பிட்டனர்; "வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நன்னெஞ்சம் சிந்திக்க, கேட்க செவி" என்று வழுத்தினர்: “ சிங்தைக்கு இனிய, செவிக்கு இனிய, வாய்க்கு இனிய, வங்த இருவினைக்கு மாமருந்து” என்று பாராட்டினர். உரையாசிரியர்களின் மேற்கோளாட்சியில் வள்ளுவருக்குத்தான் பெரும் பங்கு! வள்ளுவர் வாக்குப் பயிலாத இடம் எங்கும் இல்லை; என்றும் இல்லை. கடந்த ஒரு நூற்றாண்டாகப் பல்வேறு மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப் பெற்றது. தமிழ்நாடு முழுவதும் களி நடம் புரிந்த வள்ளுவர் வாய்மொழி இப்பொழுது உலக அரங்கில் ஒவ்வொருவருடைய மனத்திலும் கொலுவீற்றிருக்கிறது என்றால் மிகையாகாது.

பதின்மர்

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளுக்கு உரையெழுதிய ஆசிரியர் பதின்மர் என்பதைத் தொண்டை மண்டல சதக மேற்கோட் பாடலால் அறியலாம்.