பக்கம்:இலக்கியக் கேணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

இலக்கியக்கேணி


மன்னனாகிய இரண்டாம் வாக்பதிராசன் காலத்தவர் என்று வடநூற் புலவர் முடிவு செய்துள்ளனர். ஆதலின் 11 ஆம் நூற்றாண்டில் அந்நூல் விளக்கம் எய்தியது என அறியலாம். ஆகவே பரிப்பெருமாளின் காலத்தின் மேலெல்லை இப் பதினென்றாம் நூற்றாண்டெனக் கோடல் பொருந்தும்.

எனைவகை (514) கொலைமேல் (551) துளியின்மை (557) இடை தெரிந்து (712) என்ற குறள்களுக்குப் பரிப்பெருமாள் உரை கிடைக்க வில்லை.

பரிப்பெருமாள் கொண்ட முறைவைப்பு

மணக்குடவர் கொண்ட முறைவைப்பைப் பெரும் பாலும் ஒட்டியேயுள்ளது. ஒரோவழி சிறிது மாறு மட்டும் உள்ளமை உரைக்கிடையிற் கண்டுகொள்க. ஒரோவழி மணக்குடவர் கொண்ட மூலபாடங்களிலும் வேறு பாடங்களும் பரிப்பெருமாள் கொண்டுள்ளார்.

பரிப்பெருமாளுரைப் பதிப்புக்கள்

பரிப்பெருமாளுரையும் காலிங்கருரையுமாகத் திருப்பதி வேங்கடேசுவர பல்கலைக் கழகத்து வெளியீடாகத் திரு T.P. பழனியப்பப் பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அறத்துப் பாலுக்குப் பரிப்பெருமாள் உரை கிடைத்திலது. பின்னர்த் தருமபுர ஆதீனத்திலிருந்து திருக்குறள் உரைவளம் வெளியிடப் பெற்றது. மடக்குடவருரையிற் காணாது அதிகமாயுள்ள பரிப் பெருமாளுரைப் பகுதிகள் மட்டும் அதில் தரப்பெற்றன. திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தினின்று வெளி வந்த திருக்குறள் உரைக் கொத்தில் பரிப்பெருமாள் உரைப் பகுதி முழுதும் தரப்பெற்றுள்ளது.