உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிப்பெருமாள்

65


திருமுருகாற்றுப்படை யுரை

திருமுருகாற்றுப் படைக்குள்ள பல உரைகளில் நச்சினார்க்கினியருரையே எல்லாரும் அறிந்ததோருரையாகும். திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தினின்று வெளியிடப்பெற்ற திருமுருகாற்றுப்படை உரைக் கொத்தில் பரிப்பெருமாளுரையும் காணப்பெறுகின்றது. அதில் கவிப் பெருமாள் என்று குறிக்கப் பெற்றுள்ளார். இவருடைய உரை எளியநடையில் அமைந்துள்ளது; ஆற்றொழுக்காகவும் உள்ளது. இவ்வுரை சிலவிடங்களில் பிறருரையினும் சிறந்துள்ளது. " சின்னாள் ஆவினன் குடி அசைதலும் உரியன்" என்புழிச் "சின்னாள் " என்பதற்குப் பிறரெல்லாம் 'சிலநாள்' என்று உரைவகுத் திருக்கப் பரிப்பெருமாள் 'சின்-அசைநிலை' என்று கூறி 'நாள்' என்பதற்கு 'எங்ஙளும்' என்று உரைதந்துள்ளார்.' முருகப் பெருமான் ஆவினன்குடியில் சின்னாள் தங்கியிருத்தலுமுரியன்’ என்னும் உரையினும் 'எங்காளும் இருப்பன்' என்ற பரிப்பெருமாளுரை சிறந்திருத்தல் காண்க. இனிப் 'பழமுதிர் சோலைமலை கிழவோனே' என்ற வரிக்குப் 'பழங்கள் உதிரும் சோலைகளையுடைய மலைக்குரியவன் ' என்று பிறரெல்லாம் பொருள் தங்துள்ளனர். ஆனால் பரிப்பெருமாள், ' பழங்கள் முற்றப் பெற்ற சோலைமலைக்குரியவன் ' என்று பொருள் கூறியுள்ளார். இதனால் முருகனுக்குரியமலே 'சோலைமலை ' என்று பரிப்பெருமாள் கருதினார் என அறியலாம். இதனானும் திருமுருகாற்றுப்படைக்கு இவருரைத்த உரை சிறந்து கிற்றல் அறியத்தகும்.