உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. பரங்குன்றின் அணி

ஆசிரியர்

செவ்வேளுக்குரியதாகிய 17 ஆம் பரிபாடல் இயற்றியவர் நல்லழிசியார் என்ற புலவர். நல்லழுசியார் என்றும் இப்பெயர்க்குப் பிரதிபேதம் உண்டு. இவர் வையைக்குரியதாகிய 16 ஆம் பரிபாடலையும் இயற்றியுள்ளார்.

பொது

இப்பாடலில் மதுரை 'பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடல்' (வரி 22) 'கொய்யுளை மான் தேர்க் கொடித் தேரான் கூடல்' (வரி 45) என்றும், சூரிய மண்டிலம் 'தேயா மிண்டிலம்' (வரி 32) என்றும், வையையாறு தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையை' (வரி 49) என்றும் குறிக்கப் பெற்றுள்ளன.

கடம்ப மர வழிபாடு (1-8)

பல அன்பர்கள் நாடொறும் மாலையில் செவ்வேள் எழுந்தருளியிருக்கும் கடம்பினை வழிபட வருவர். அவர்கள் மலர்களையும், குழைகளையும், பூந்துகில்களையும், மணியினையும், வேலினையும் சுமந்து வருவர். உடன் வருவார் தீபத்தையும், இசைக்கருவிகளையும், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களையும், அகிற்புகையையும், கொடிகளையும் கொண்டு வருவர். வழிபடுவோர்