உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரங்குன்றின் அணி 67

சந்தனத்தைத் தெளித்து, (வேலன் அரைக்கண்ணே விடையைக் கட்டின பூசையையுடைய கடிமரமாகிய) கடம்ப மரத்தை உரையாலே ஏத்துவர் : ஆலாபனம் செய்து பாடுவர். இங்ஙணம் நாடோறும் வழிபடுவோர் திருப்பரங்குன்றத்து அடியின்கண் உறைவர். இவவன்பர்கள் தேவர் உலகத்து உறைதலையும் வேண்டார்.

திருப்பரங்குன்றத்தின் சிறப்பு (9-21).

திருப்பரங்குன்றத்தின் ஒருசார் பாணர்களது யாழ் இன் தீங்குரல் எழ, அதன் எதிர் யாணர் வண்டின் இன்னிசை எழும்.

ஒரு பால் வேய்ங்குழலின் ஒலியெழ, அதன் எதிர் பண்ணார் தும்பி முரலும்.

ஒரு புறம் மண்ணார் முழவின் இசை எழ, அதன் எதிர் அண்ணல் நெடுவரை அருவி நீர் ஒலிக்கும்.

ஒரு பக்கம் பாடல் நல் விறலியர் அசைய, அவர் எதிர் வாடையினால் பூங்கொடிகள் அசையும்.

ஒரு திறம் பாடினி முரலும் பாலைப் பண் கிறை குறையோடு ஒலிக்க, அதன் எதிர் ஆடுசீர் மஞ்ஞையின் அரித்தெழும் குரல் எழும்.

இங்ஙனம் கல்விகளால் வென்றி பெற எண்ணியவர்கள் மாறுமாறாக எழுந்தாற் போன்ற தன்மையைச் செவ்வேளின் திருப்பரங்குன்றம் உடையது.

       மாறுமா(று) உற்றனபோல் மாறெதிர் கோடல் 
       மாறட்டான் குன்றம் உடைத்து.