உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இலக்கியக்கேணி

 நகணித்தாயினும் சேய்த்து! (22-27)

'பாடல் சான்று பல்புகழ் முற்றிய' கூடலுக்கும் திருப்பரங் குன்றத்திற்கும் இடைநின்ற இடம் மிகவும் அணித்து; ஆயினும் மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடுதலால் மிகச் சேய்த்து ஆகாகின்றது: மகிழ்ச்சி மிக்க அம்மகளிரது கூந்தலினின்றும் மைந்தரின் குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்த மாலைகளால் தடுக்கப்பெற்று இயங்கு நெறி இல்லையாயிற்று.

இமையாரும் இமைப்பர் ! (29-32)

புகழால் திசையெங்கும் பரவிய திருப்பரங்குன்றின் கண் மேவி, உலகத்தார் பலவிடத்தும் செய்கின்ற பூசையில், செவ்வேள் ஆவியாக ஏற்றுக்கொள்ளும் அகிற்புகை மேலே போதலால் தேவர்களும் இமைப்பர்! சூரிய மண்டிலமும் தோன்றாமல் மறையும்.

அனைய பரங்குன்றின் அணி (33.41)

ஈர மாலை இயல் அணியார்-வளை முன்கை வணங்கிறையார் ஆகிய மகளிரும், அவர் அணைமென் தோளின் கண் தங்கி அன்பு ஒத்தார்-தார் மார்பின் தகையியலார் ஆகிய மைந்தரும் மனம் மகிழ்துங்கிப் பாய்ந்தாடுதலால் வண்டுகள் வெருவிச் சுனைமலர்த்தாதினை ஊதப் பெறா. திருப்பரங்குன்றினது அலங்காரம் அத்தன்மைய !

மலைக்கண் வார் வெள்ளருவி ஆனாது பறந்து உழவ ரது வயலின்கண் பரக்கும். அவ்வருவியில் விளையாடு மகளிர் இயங்குதலால் அவர் பூணினின்றும் விழுந்த லே' மணி உழுகிலத்தைச் சிதைக்கும்.