பக்கம்:இலக்கியக் கேணி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரங்குன்றின் அ ரிை 69

தடுமாற்றம் நன்று (42-46)

பிரிந்த தலைவர் வினைமுடித்துக் கடிதின் வந்து கூடு தற்கு வெள்ளருவி யணிந்த திருப்பரங்குன்றின்கண் தலைவியர் தெய்வ விழாச் செய்வர். அங்ஙணம் கூடியவழிச் சிலர் (கெடாத விழுப்புகழ் உடைய வளங்கெழு) வையையின்கண் விருந்தயர்வர் ; அதாவது அத்தலைவ ரோடு புதுப்புனல் ஆடுவர், ஏனையோர் கூடற்கண் விருந்தயர்வர். இங்ஙனம் தெய்வ விழாவும் விருந்தயர் தலுமாகிய இவை திருப்பரங்குன்றிற்கும், வையைக்கும், மதுரைக்கும் தடுமாறி வருதல் இல்லற நெறியாதலின் நல்லொழுக்கம் ஆயிற்று.

வாழ்த்து (48-53)

' மணி கிற மஞ்ஞையினையும், உயர்ந்த கோழிக் கொடியினையும், பிணிமுகத்தை யூர்ந்து செய்யப்பெற்ற வெல் போரினையும் உடைய தலைவ மக்கள் மாட்டுப் பணி மொழியை யொழித்து, கின் புகழையே ஏத்தி நின் அணி கெடுங்குன்றத்தைப் பாடித் தொழுகிறோம்; 'பிறவித் துன்பம் நீங்கிய இன்பம் மலிந்த நாட்களை யாம் பெறுக' என்று யாமும் எம் சுற்றத்தாரும் வேண்டிக் கொள்கிறோம்; அருள் புரிக!”

             மணிநிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடிப்
            பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ ! 
            பணி யொரீஇ நின்புகழ் ஏத்தி 
           அணிநெடுங் குன்றம் பாடுதும்! தொழுதும்! 
           அவை, யாமும்எம் சுற்றமும் பரவுதும் ! 
           ஏம வைகல் பெறுகயாம் எனவே.