உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீணை

75


தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் கமக வேறுபாடுகளையும் நுட்ப சுருதிகளையும் சோதித்தறிவதற்கு வீணையைத் தவிர மற்றெந்த வாத்தியமும் ஒவ்வாதென்பது அனுபவமான உண்மையாகும் இதுவே இசைக் கருவிகளுக்கெல்லாம் அரசியாக வீற்றிருப்பது.+

யாழ்-விணை

வீணை திருக்குறளில் கூறப்பெறவில்லை. பழந்தமிழ் நூல்களில் யாழ் என்பதே எங்கும் பயில்வது. மாணிக்கவாசகர், 'இன்னிசை விணையர் யாழினர் ஒருபால்' என்றமையால் வீணைவேறு யாழ்வேறு என்று கருதுவதற்கும் இடம் தருகிறது.

'முற்காலத்தில் தமிழ் நாட்டில் யாழ் ஒரு சிறந்த கச்சேரி வாத்தியமாக இருந்தது. தேவார காலத்திற்குப் பின் யாழ் மறையத் தொடங்கியது. வீணை வாத்தியம் வந்ததும் அதில் பல கமகங்களையும் இசை நுட்பங்களையும் தெளிவுற வாசிப்பதற்கு வசதிகள் இருந்தமையால் வீணையைக் கைப்பற்றலானர்கள்; யாழை நழுவ விட்டார்கள்...... மேலும் யாழில் பல நரம்புகள் இருந்தன. அவைகளைச் சுருதி கூட்டுவதற்கு வெகு நேரம் பிடித்திருக்கும்...... பிற்காலத்தில் எல்லாப் பண்களையும் ஒரே சுருதியில் பாடும் சம்பிரதாயம் ஏற்பட்டவுடன், பண் மாறும் பொழுதெல்லாம் யாழில் சில நரம்புகளையும் திருப்பிச் சுருதி கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மெட்டுகளுடன் கூடிய வினையில் இந்தச் சிரமங்கள் இல்லை...... ; சுருதி கூட்டுவதும் சுலபம். கமகங்களையும் நுட்ப சுருதிகளையும் வாசிப்பதும் எளிது...... யாழில் ஒவ்வொரு நரம்பிலும் ஒவ்வொரு ஸ்வரம்தான் வாசிக்க இய

          *இசையியல- 5-ம் தொகுதி -முதற்பகுதி -பக்கம் 97
              +      .  ஷ         ஷ       ஷ            ஷ             . 34.