உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

இலக்கியக்கேணி


லும். அந்த ஸ்வரங்களும் சுத்த ஸ்வரங்களாகவேதான் பேசும்...... யாழில் துரிதகால இசை வாசிப்பதும் மிகக்கடி னம்...... யாழில் பேசாத இசை நுட்பங்கள் விணையில் வாசிக்கப்படும். யாழிற்கு நல்ல நாதம் இருந்தமையால் அதை விட்டு விட இசை வல்லுநர்க்கு மனம் வரவில்லை; விணையுடன் கூடச் சில நூற்றாண்டுகள் வாசித்தார்கள்; நாளடைவில் யாழைக் கைவிட்டார்கள் " என்று இசை வல்லுநர் எழுதியுள்ளார்கள்.

சிலப்பதிகாரத்தில்

சிலப்பதிகாரத்தில் (6) கடலாடுகாதையில் வீணை குறிக்கப்பெற்றுள்ளது:-

            " நாரதன் வீணை நயந்தெரி பாடலும் 
            தோரிய மடந்தை வாரம் பாடலும்
            ஆயிரங் கண்ணுேன் செவியக நிறைய
             நாடக முருப்பசி நல்கா ளாகி
             மங்கல மிழப்ப வீணை மண்மிசைத்
             தங்குக இவள் எனச் சாபம் பெற்ற 
             மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய 
             அங்கர வல்குல் ஆடலும் காண்குதும்" (வரி 18-25)

சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு கல்லார் "நாரதன் வீணை" என்ற விடத்து 'நாரத முனிவன் யாழ்' என்றும், உருப்பசி வீணை ” என்ற விடத்து “ வீணை " என்றும் பொருள் தந்தார். இதனான் நாரத அக்குரியது யாழ் என்றும், உருப்பசிக்குரியது வீணை என்றும் அறியலாம். இனி வீணை என்ற விடத்துச்

  • தமிழிசை மலர்-4, பக்கம் 54-55.