பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இலக்கியத் தூதர்கள்

லும் உயர்குலமகளாகிய துணைவியோடு இரவிலேயே பிரிந்து சென்றதற்குக் காரணமான என் பிழையை ஒரு சிறிதும் அறியாமல் கலங்கி நிற்கும் என் கெஞ்சத்தின் கவலையை மாற்றியருள வேண்டும்.’

‘அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’

என்று ஓலையொன்றில் எழுதித் தன் கூந்தலால் முத்திரையும் இட்டாள்.

கோசிகன் முயற்சி

மாதவியின் காதல் தூதனாகக் கோவலன்பாற் புறப்பட்ட கோசிகன் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு பல வழியிலும் திரிந்து அவனைத் தேடினான். மதுரைக்குச் செல்லும் வழியில் ஒரு பார்ப்பனச்சேரியின் பக்கமாகக் கோசிகன் போய்க் கொண்டிருந்த போது, ஊருக்கு வெளியே வழியோரத்தில் அமைந்த நீர்நிலை யொன்றைக் கண்டான். அதை நோக்கிக் கோவலனைப் போன்ற ஒருவன் போய்க்கொண்டிருப்பதையும் கூர்ந்து நோக்கினான். கற்பு மனையாளொடும் கான் வழியில் நடந்து வந்ததை நினைந்து நினைந்து வருந்தி உடல் மெலிந்து வாடி, உருவம் வேறுபட்டிருந்த காரணத்தால், அவனைக் கோசிகனால் எளிதிற் கண்டுகொள்ள முடியவில்லை. எனினும் தன் ஐயத்தை அகற்றிக் கொள்வதற்காக ஒரு முயற்சி செய்தான்.