உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

இலக்கியத் தூதர்கள்

புகார் நகரம் உன் பிரிவாற் பெருந்துயருற்றுப் பொலிவிழந்தது. மாதவியின் கடிதத்தை நீ மறுத்ததாக வசந்தமாலை சொன்னதும் அவள் மேனி பசந்து நெடுநிலை மாடத்தின் இடைநிலத்தின் ஒருபால் அமைந்த படுக்கையில் நின்னை நினைந்து வருந்தி வீழ்ந்தாள். அவள் அடைந்த துயர்கேட்டு அவளுக்கு ஆறுதல் கூறுதற்காக யான் சென்றேன். அவளோ என் இரண்டு அடிகளையும் தொழுது, ‘எனக் குற்ற துயரத்தைத் தீர்ப்பாயாக!’ என்று தனது மலர்க்கையால் இந்த ஓலையை எழுதி, ‘என் கண்மணியனைய கோவலருக்கு இதனைக் காட்டுக!’ என்று தந்தாள். இதனை எடுத்துக்கொண்டு நின்னைக் காணமல் எங்கெங்கோ தேடியலைந்தேன்” என்று கூறி, மாதவியின் ஓலையைக் கோவலன் கையிற் கொடுத்தான்.

கோவலன் குற்றம் உணர்தல்

ஓலை மடிப்பின் புறத்தே மாதவி தன் கூந்தலால் இட்ட இலாஞ்சனை இனிய நெய் மணம் கமழ்ந்தது. அது கோவலன் முன்பு நுகர்ந்த நறுமணமாதலின் பழைய நினைவை உணர்த்தியது. அதைக் கைவிடாமற் பிடித்திருந்து, பின்னர் அவன் ஓலையைப் பிரித்து நோக்கினான். மாதவி எழுதிய மொழிகளே உணர்ந்து வருந்தினான். ‘இஃது அவள் குற்றமன்று, என் குற்றமே’ என்று மனங் குழைந்து நிகழ்ந்ததை எண்ணி நெக்குருகினான். ஒருவாறு தளர்வு நீங்கி, ‘அந்தணாள இந்த ஓலையின் பொருள் என் பெற்றோருக்கு யான் எழுதுவது போலவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆதலின் இந்த ஓலையையே அவர்கட்குக்