பக்கம்:இல்லற நெறி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 141

வத மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து தொடங்கிப் பதினைந்து நாட்கள் வரை-கருப்பையின் உட்புறத்தோல் மெதுவாக உப்பித் தடித்துக் கொள்ளத் தொடங்குகின்றது. இவ்வாறு நன்ருகத் தடித்துக்கொண்ட தோலின் கீழ்ப் பரவி யுள்ள குருதிக் குழல்களில் குருதியோட்டம் அதிகம் ஏற்படு இன்றது தொடக்கத்தில் கால் அங்குலக் கனத்திற்குக் குறைவாக இருந்த இந்த எண்டோமெட்ரியம் அடுத்த முறை நிகழும் மாதவிடாய் நாளுக்குள் அரையங்குலம், அளவு நன்ருகத் தடித்துப் பஞ்சணைபோல் மிருதுவாகி விடு கின்றது. பெண்ணின் முட்டையணு கருவுற்ருல் மேற்படி கருவை வரவேற்றுக் காப்பதற்காகவே கருப்பையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு பெரிய அரசர் அல்லது முக் கிய விருந்தினர் ஒருவர் நம் வீட்டிற்கு வருங்கால் நாம் இரத் தினக் கம்பளம் விரித்து அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்வது போன்று கருப்பையின் உள்ளே ஏற்பாடுகள் இயற் கையாகவே நடைபெறுகின்றன! கருப்பையில் இவ்வாறு வரவேற்பிற்குரிய ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கும்பொழுது சூற்பையில் முதிர்ச்சியுற்றுப் பக்குவமான முட்டையணு கருக்குழலில் வந்து தயாராகத் தங்கிக்கொள் கின்றது. இந்த நிலையில் புணர்ச்சி ஏற்பட்டால் விந்தனுக் கள் நீந்தி வந்து கருக்குழலையடைகின்றன; அவற்றுள் வன் மையான விந்தணுவொன்று முட்டையணுவைத் துளைத்து அதனுடன் கலந்து அதனைக் கருவுறச் செய்கின்றது. கரு வுற்ற முட்டை சில நாட்கள்தாம்-சுமார் எட்டு நாட்கள் தாம்-கருக்குழலில் தங்கியிருக்கும். அதற்குப்பிறகு அங்கே அது வளர இடம் இல்லையாதலின் அங்கிருந்து பெயர்ந்து கீழே இறங்கிக் கருப்பையை வந்தடைகின்றது அங்ங்னம் வந்த கரு அணு கருப்பையில் தயாராக இருக்கும் பஞ்சணை போன்ற உட்புறத் தோலில் தன்னைப் பதித்துக்கொண்டு வளரத் தொடங்குகின்றது. பஞ்சணையமைப்பும் தொடர்ந்து வளர்த்து இளஞ்சூலுக்கு உற்ற இடமாக அமைந்து விடுகின் நது. இவ்வாறு முட்டை கருப்பையில் பதித்துக் கொண் டுள்ள நிலை ஏற்கெனவே படம்-19இல் விளக்கப்பெற்றுள் ளது. கருவுற்ற முட்டைகள் சில நாட்களுக்குப் பின்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/147&oldid=597903" இலிருந்து மீள்விக்கப்பட்டது