உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இல்லற நெறி


அடையும்நிலை படத்தின் வலப்பக்கத்தில் காட்டப் பெற் றுள்ளது.'

முட்டையணு கருவுருவிடில் அதற்காக நடைபெற்ற ஏற் பாடுகள் கலையத் தொடங்குகின்றன. தடித்து வளர்ந்து கொண்டேபோன கருப்பையின் உட்புறத்தோலில் வெடிப்பு கள் ஏற்பட்டு அவை கழன்று சிறு துண்டுகளாக வெளிவந்து விடுகின்றன. அவற்றுடன் அதன் அடியிலிருந்து குருதிக் குழ லும் பிளந்துகொண்டு உதிரத்தை வடியவிடுகின்றன. இதுவே மாதவிடாயின் மர்மமாகும். சிதைந்த எண்டோமெட்ரிய மும் குருதியும் கலந்த பொருளே மாதவிடாயின்பொழுது வெளிப்படுகின்றது. அஃதாவது, மாதவிடாய் என்பது முதிர்ந்த முட்டையணு கருவுறவில்லை என்பதற்கு ஒர் அறி குறியாகும். மீண்டும் அடுத்த திங்கள் வரப்போவதாக எதிர் பார்க்கும் கருவுற்ற முட்டையின் நிமித்தம, கருப்பையில் ஏற்பாடுகள் நிகழத் தொடங்கும்பொழுது, எண்டோமெட் ரியம் தடிக்கத் தொடங்கியதும் இவ்வாறு வெளிப்படும் ஒழுக்கு நின்று விடுகின்றது. கருவுறுவதற்காகத் காத்திருந்த முட்டையணுவும் நலிந்து போய் மாதவிடாய் ஒழுக்குடன் வெளியேறி விடுகின்றது. ஒரு முட்டை முதிர்ச்சியுறும் ஒவ் வொரு தடவையும் சூற்பைகளில் உண்டாகும் ஈஸ்டிரின் 25 "புரோஜெஸ்டின்' என்ற ஹார்மோன்கள் கருப்பைக்கு அனுப்பப் பெற்று அங்கு அவை அனைச்சவ்வின் மீது அமைப் பில் சில மாற்றங்களைத் தொடங்கிவைக்கின்றன:

ஒவ்வொரு தடவையும் மாதவிடாய் ஏற்படும் முன்பே சில பெண்களுக்குத் தலைவலி, களைப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் முதல் நாளே தோன்றிவிடுகின்றன. சிலருக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னரே முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்

124. இந்நால்-பக்கம்-135. 125. hreivių fissr–Estrin (Estrogen): 136. HGurazoolos--Progestin (Progesterone):

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/148&oldid=1285149" இலிருந்து மீள்விக்கப்பட்டது