பக்கம்:இல்லற நெறி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 275

திருமணத்திற்குப் பிறகு இருபாலாரிடையேயும் ஏற்படும் உடல் உள மாறுபாடுகளும் பிறப்புறுப்புகளில் அதிகமாகச் சுரக்கும் சில நீர்களுமே இம் மாறுதலை உண்டாக்குகின்றன என்றும் கருதலாம்; எனினும், விந்துப்பாய்மம் உறிஞ்சப் பெறுதலே இம் மாறுதலே விளைவிக்கின்றது என்பதை இது காறும் எவரும் திட்டவட்டமாக மெய்ப்பிக்கவில்லை.

சருவுறுதல்: கருப்பையினுள் நுழைந்த விந்தனுக்கள் சுமார் மூன்று நாட்கள் வரை உயிரோடிருக்கின்றன. ஆல்ை கருப்பையின் மேற்பகுதியில் இருக்கும் விந்தனுக்கள் எத் தன நாட்கள் வாழும்என்று திட்டமாகக் கணக்கிடப் பெற வில்லை. ஆளுல் அவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் கருவுறும் ஆற்றலைப் பெற்றிருப்பதில்லை என்று கருதப் பெறுகின்றது. கருப்பைதசையின் சுருக்கங்களால் விந்தனுக்

$rskurs för முன்மூழ் தின்

படம்-23 : கருவுறுதலைக் காட்டுதல்

(முதல் நிலை, முட்டையணுவைப் பல விந்தணுக்கள் சூழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டுசின்றது. இரண்டாம் நிலே, ஒர் ஒற்றை விந்தனு முட்டையனுவைத் துளைக்துச் செல்விதை விளக்குகின்ற்து மூன்ரும் நிலை, விந்தணுவின் தலைப்பகுதி முட்டையணுவில் தங்கியிருப்பதை உணர்த்து கின்றது.) கள் மேல் நோக்கி நகர்ந்து சென்று கருப்பையின் இரு புறங் களிலுமுள்ள கருக் குழலின் வாயில்களையடைந்து அவற்றி னுள் புகுந்து அவற்றின் முடிவுப் பகுதிவரை நகர்கின்றன: குழலினுள் முட்டையணு இருப்பின், ஒருவித உயரியல்-வேதி யியல் கவர்ச்சி உண்டாகின்றது, பல விந்தனுக்கள் முட்டிை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/181&oldid=597943" இலிருந்து மீள்விக்கப்பட்டது