பக்கம்:இல்லற நெறி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இல்லற நெறி


யணுவைச் சூழ்ந்து கொள்ளுகின்றன; இவற்றுள் ஒன்றுமுட் டையணுவைத் துளைத்துச் சென்று வாலறுபட்டு உள்ளே தங்குகின்றது. இதனைப் படம் (படம் 23) காட்டுகின்றது. இதுவே கருவுறுதல்' என்பது. இதனை முன்னர் எழுதிய கடிதங்களிலும் குறிப்பிட்டுள்ளேன். படங்களைக் கொண்டும் நன்கு விளக்கி உள்ளேன்.29 முட்டை யணுவில் ஒன்று நுழைந்ததும் முட்டையணுவின் வெளிப்பகுதி ஒரு தடித்த சவ்வினுல் சூழப்பெறுகின்றது. இதல்ைவேறு விந்தணுக்கள் உள்ளே நுழைய முடிவதில்லை. குழல்களில் தங்கும் ஏனைய அணுக்கள் பிரிந்தழிந்து குழல்களால் உறிஞ்சப் பெறுகின் றன.

ஒரு முட்டையணு ஒரு விந்தணுவால் கருவுறுவதற்கு இவ்வாறு எண்ணற்றவிந்தனுக்கள் உண்டாக்கப்பெற்றிருப் பதற்குக் காரணம் என்ன என்று நீ வினவலாம். விந்தணுக் கள் தம்முடன் ஹயலூரோனைடேஸ் என்று வழங்கப் பெறும் ஒருவித துரைப்புளியத்தைக் கொண்டுள்ளன என்று அண்மைக்காலத்தில் கண்டறியப்பெற்றுள்ளது. இந்த நுரைப்புளியம் விந்தனுக்கள் முட்டையணுவை அடை வதற்குரிய வழியை ஆயத்தமாக்குகின்றது என்று கூறுகின்ற னர். இதுவே, கருவுறுதல் நிகழ்வதிலும் முக்கிய பங்கி னைப் பெறுகின்றதாகக் கருதுகின்றனர். விந்துப் பாய்மத்தில் விந்தணுக்களின் அதிக எண்ணிக்கைக்கேற்றவாறு அதிக மான நுரைப்புளியமும் இருக்கும். கருப்பமுறுவதற்கும் இது நல்ல வாய்ப்பளிக்கின்றது. பல்லாயிரக்கணக்கான விந்த ணுக்களிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகலாம். வேறு காரணங்களும் இருக்கலாம். அவை இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை.

விந்தனு முட்டையணுவை அடைவதற்குச் சாதாரண மாக எவ்வளவு காலம் ஆகக் கூடும் என்று நீ வினவலாம்;

سمسم

19. கருவுறுதல்-Fertilisation 20. இந்நூல்-பக்கம் (133-34) 21. பிரிந்தழி-disintegrate. 22. ஹயலூரோனை Фt-siv-Hyalouronidase: 233 дивота ноћишћEnzyme:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/182&oldid=1285166" இலிருந்து மீள்விக்கப்பட்டது