உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 爵翰鲸

வேண்டி ஒரு நியதிக்கு மக்கள் சிரமப்பட வேண்டியதில்லை: உண்மையில் பழங்கால மக்களும் இன்று விவசாய மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்களும், பிரசவத்தைச் சிரமம் என்று கருதுவதில்லை. உறையிலிருந்து கத்தியை உருவுவது போன்று குழந்தை எளிதாக அவர்கட்குப் பிறக்கின்றது! இவர்கள் பிரசவம் ஆன மறுநாளே வேலைக்கும் போய் வரு கின்றனர்: நெல்லை மாவட்டத்தில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மனைவி நல்லஉழைப்பாளி. இஸ்லாம்சமயத் தினர். நல்ல உடற்கட்டையுடையவர். நிறை கருப்பகாலத் தில் அவள் ஒரு நாள் ஒரு சிறு உறைக்கிணற்றில் கிணற்றின் இரு புறங்களிலும் கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நீர் இறைத்துக்கொண்டிருக்கும்பொழுது கால் சறுக்கியதால் தவறிக் கிணற்றில் விழுந்து விட்டார். கிணற்றில் மார்பு அளவு நீர் இருந்தது. அம்மையார் கிணற்றில் விழுந்தவுடன் பிரசவம் நடந்துவிட்டது தாய் குழந்தையைப் பாதுகாப் புடன் கையில் ஏந்திக் கொண்டு விட்டார். அண்மையிலிருந் தோர் தாயையும் சேயையும் கிணற்றிலிருந்து அகற்றினர். தாயும் சேயும்.நன்னிலையில் இருந்தனர். இப்பொழுது (1961) அக்குழந்தைக்கு இரண்டாண்டுகூட நிறைவுபெறவில்லை.

பழங்காலத்துப் பெண்களிடமும் இன்றைய விவசாய இனத்துப் பெண்களிடமும் எளிதாகப் பிரசவம் நடைபெறு வதற்குப் பல காரணங்கள் இருந்தன. இப்பெண்களின் திறந்த உடலில் கதிரவன் ஒளி நன்கு படுகின்றது; உண்ணும் உணவில் இன்றியமையாத வைட்டமின்கள் உள்ளன; அவர் களுடைய எலும்புக் கூடும் இடுப்பெலும்புக் கட்டும் நன்கு வளர்ந்திருக்கின்றன. அன்றியும், அவர்களுடைய கடின மான உழைப்பும் அவர்கள் பெறும் குழந்தையின் அளவைச் சிறியதாக்குகின்றது; இதனுல் பிரசவமும் எளிதாகின்றது. அவர்களுடைய திருமணமும் பெரும்பாலும் உறவினர்களுக் குள்ளேயே நடைபெற்றுவருகின்றது. இதல்ை உயரம், எடை தோற்றம் ஆகியகூறுகளில் ஆணுக்கும்பெண்ணுக்கும் அதிக வேற்றுமை இருப்பதில்லை. மேலும், பழங்காலத்தில் பெண்

இ-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/215&oldid=598011" இலிருந்து மீள்விக்கப்பட்டது