பக்கம்:இல்லற நெறி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இல்லற நெறி


கள் தங்கள் உடிலழகைப் பற்றி அதிகம் அக்கறை கொள் ளாது நல்ல உணவு உண்டனர்; காற்ருேட்டமான வீடுகளில் வசித்தனர். சோம்பலின்றி வீட்டு வேலைகள் அனைத்தையும் தாமே செய்து உடலே நன்னிலையில் வைத்துக் கொண்டிருந் தனர். மேலும் திருமணமும் தக்க பருவத்தில் நடை பெற்றதால், குழந்தை பிறக்க உகந்த பருவத்திலேயே தாய் மையை அடைந்து சுகப்பிரசவத்திற்கு உள்ளாயினர். தவிர, இவர்கள் மைேபாவனையும் நல்ல நிலையில் இருந்தது. அவர்கள் பிரசவத்தைத் துங்குவது, சாப்பிடுவது போன்ற இயற்கை நிகழ்ச்சியாக எண்ணி அதனை இன்பத்துடன் வரவேற்றனர்.

நாகரிகத்தின் விளைவுகள்: இன்றைய வாழ்வில் எத்த னையோ காரணங்களால் எத்தனையோ மாற்றங்கள் நிகழ் கின்றன. தற்காலத்தில் படிப்பு, செல்வம், வாழ்க்கை நிலை, காதல் என்ற பலவற்ருல் திருமணம் பெரிதும் பாதிக்கப் பெற்றுள்ளது. உறவினன் என்ற காரணத்திற்காக படிப் பில்லாத தாய்மாமன்மகனுக்கோ அத்தைமகனுக்கோ தமது செல்வியைத் திருமணம் செய்துகொடுக்கப் பெற்ருேர்கள் விரும்புவதில்லை. காதல் என்ற உணர்ச்சியால் வலிமையாக ஈர்க்கப்பெறும் இளம் உள்ளங்கள் சாதி, சமயம், இனம் போன்ற வேற்றுமைகளைப் பாராது திருமணம் புரிந்து கொள்ளுகின்றனர். இதல்ை சில சமயம் உயரமும் பருமனு மான ஓர்ஆடவருக்கு மிகவும்மெல்லிய தோற்றமுடைய ஒரு பெண் வாழ்க்கைப்படநேரிடுகின்றது. தந்தையைப்போன்று குழந்தை அமைந்து விட்டால் தாய் சிரமப்பிரசவத்திற்கு உள்ளாகுகின்ாள். மேலும், இக்காலத்துப்பெண்களோ நல்ல உணவு உண்பதில்லை; நல்ல அறைகளில் வசிப்பதுமில்லை. விட்டுவேலைகளைச் செய்வதே இல்லை. இவர்கள் இயற்கைக்கு விரோதமாக ஆடையணிகளையும் அணிகின்றனர். இவை யாவும் பிரசவத்தில் பங்குகொள்ளும் தசைகளின் வளர்ச் இக்குப் பாதகமாகவே அமைகின்றன. இதல்ை இவர்களிடம் பெரும்பாலும் சுகப்பிரசவம் என்பது முயற் கொம்பாக் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/216&oldid=1285183" இலிருந்து மீள்விக்கப்பட்டது