பக்கம்:இல்லற நெறி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இல்லற நெறி


மாதவிடாய்த் தோற்றம்: இவ்விடத்தில் இன்ைெருசெய்தி யையும் நீ அறிந்துகொள்ளவேண்டும் பிரசவித்த பின்பு மாதவிடாய் சில பெண்களிடம் விரைவாகவும் சிலரிடம் தாமதமாகவும் ஏற்படலாம்: குழந்தைக்குப் பால் கொடுக் காது செயற்கை முறையில்வளர்த்தால் தாயினிடம் விரைவில் மாதவிடாய் தோன்றலாம். பிரசவம் ஆன இரண்டாவது மாதத்திலிருந்து பதினெட்டாவது மாதத்திற்குள் எப்பொ ழுது வேண்டுமாயினும் தாயிடம் மாதவிடாய் ஏற்படும்: அஃது அந்தக் குடும்பத்தின் உடல் தன்மையைப் பொறுத் தது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆவதற்கு முன்பு இணைவிழைச்சு கூடாது. இதனுல்தான் பிறந்தகத்திலிருந்து கருவுயிர்த்த பெண்ணைக் குழந்தையுடன் மூன்று அல்லது ஐந்து மாதங் கழித்துப் புக்ககத்திற்கு அனுப்பும் வழக்கம் நிலவுகின்றது போலும்!

அடுத்த கடிதத்தில் இனப்பெருக்கத்தில் வேறு சில செய்திகளைக் கூறுவேன்:

இங்ங்ணம், திருவேங்கடத்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/234&oldid=1285192" இலிருந்து மீள்விக்கப்பட்டது