உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 虏29

20

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன் நலன் ஆகுக';

என்னுடைய கடிதங்களை நன்கு படித்துச் செய்திகளைச் செவ்வனேஉளங்கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்கின்றேன். ஒன்றுக்கு மேற்பட்ட குழவிகளின் பிறப்பைப்பற்றிச் சில விளுக்கள் விடுத்திருந்தாய் அவற்றை இக் கடிதத்தில் விளக்குவேன்;

ஒன்றுக்கு மேற்பட்ட குழவிகள் : ஒரு பிரசவத்தின் பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட குழவிகள் வெளிப்படுவது அதிசயமான சம்பவம் அன்று. ஒரு சமயம் ஒருவருக்கு ஏழு குழந்தைகள் பிறந்ததாகச் செய்தி வெளிவந்துள்ளது. மருத் துவ வரலாற்றில் ஆறு குழவிகள் பிறந்ததாக அதுவர் வர லாறுகள் காணப்பெறுகின்றன. நாற்பத்தேழு பேருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருப்பதாக நம்பகமான தகவல் கள் கிடைத்துள்ளன. இவர்களுள் மூவருடைய குழவிகளே உயிரோடு வாழ்ந்தன. 1934-இல் கனடாவில் ஒருவருக்கு ஒரே சமயத்தில் பிறந்த மூன்று பெண் குழவிகளும், 1943இல் தென் அமெரிக்காவைச் சார்ந்த பிரேஸில் நாட்டில் ஒரே சமயத்தில் தோன்றிய இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும், 1944-இல் துருக்கி நாட்டில் ஒருவருக்கு ஒரே சமயத்தில் பிறந்த ஐந்து ஆண்களும், உயிரோடிருப்பதாக அறிகின்ருேம். நான்கு பிள்ளைகளும், மூன்று பிள்ளைகளும் அடிக்கடிப் பிறப்பதைக் காண்கிருேம். அடிக்கடித் தோன் றும் பல் பிறவிகளில் அபூர்வமான ஒரு கணிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரிகின்றது. 88 ஒற்றைப் பிறவிக்கு ஒர் இரட்டைப்பிறவி வீதமும், 88x88க்கு, அஃதாவது கிட்டத் தட்ட 7,744 ஒற்றைப் பிறவிக்கு ஒரு மூன்றுபிறவி வீதமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/235&oldid=598055" இலிருந்து மீள்விக்கப்பட்டது