பக்கம்:இல்லற நெறி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் #31

டுப் பிரசவங்களுக்கு ஒரு பிரசவத்தில் இரட்டையரும், நீக்ரோ இனத்தாரில் எழுபது பிரசவங்களுக்கு ஒரு பிரசவத் தில் இரட்டையரும் பிறப்பதாகக் கணக்கிட்டுக் கூறியுள்ள னர். எல்லா நாடுகளையும்விட இரஷ்யாவிலும் அயர்லாந்தி லும் இரட்டைக் குழவிகள் பிறக்கும் எண்ணிக்கை மிகவும் அதிகம் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

படம்-39: ஒரு முட்டையில் உற்பத்தியான இரட் டைக் குழவிகள் கருப்பையில் இருக்கும் நிலையினைக் காட்டுதல்:

ஒன்றுக்கும் மேற்பட்டுப் பிறக்கும் குழவிகளில் ஆண் குழவி களின் எண்ணிக்கையைவிடப் பெண் குழவிகளின் எண்ணிக் கையே அதிகம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இரட்டைக் குழவிகள் பிறப்பது இரண்டு விதமாக நிகழ லாம். ஒரு வகையில் ஒரு பெண்ணின் முட்டையணுவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/237&oldid=598059" இலிருந்து மீள்விக்கப்பட்டது