உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இல்லற நெறி


ஒரு விந்தணு கலந்து ஏற்பட்ட முட்டை இரு பகுதியாகப் பிளந்துகொண்டு இரண்டு குழந்தைகளாக வளரலாம். இது படத்தில் (படம்-38) காட்டப்பெற்றுள்ளது. பெரும்பாலும் இரண்டு குழந்தைகள் தனித்தனியாகவே பிறக்கும்; சில சம யம் இரு குழவிகளும் அவர்களின்உடல்களில் யாதாவது ஒரு பகுதியில் (முதுகு, தொலை, மார்பு, புயம் முதயைவை)ஒட் டிக்கொண்டும் பிறப்பதுண்டு. தனித்தனியாகப் பிறப்பவை கள் சாதாரண இரட்டைகள் 80 என்றும்,ஒட்டிக்கொண்டு பிறப் பவைகள் சயாமில் இரட்டைகள் 81 என்றும் வழங்கப்பெறுகின் றன. இவ்வாறு பிறக்கும் இரட்டைகள் ஒரே பாலினத் தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் கொப்பூழ்க்கொடி இரண்டாக இருப்பினும் ஒரே நஞ்சுக் கொடியிலிருந்துதான் குருதி பாய்ந்து கொண்டிருக்கும். இக் குழந்தைகள் கருவில் வளர்வதைப் படத்தில் (படம்-39) காண்க. இக் குழந்தைகள் பார்வைக்கும் ஒரே அச்சில் வார்க்கப்பெற்றவைபோன்று சாயலில் வேற்றுமையின்றிக் காணப்பெறும்; இவைகளின் உடற்கூறுகளும் உளப் பண்பு களும் கூட ஒரேவிதமாகவே இருக்கும். இவை ஒரு கரு இரட்டையர்' என வழங்கப் பெறும்:

இன்ைெருவகைஇரட்டைப் பிறவியில்இரண்டுமுட்டை யனுக்கள் இரண்டுவிந்தணுக்களுடன் கலந்து இரண்டுகருவ இணுக்களாக உருப்பெற்று வளர்ந்து இரண்டு குழந்தைகளாக பிறக்கின்றன. இந்த இரண்டு முட்டைகளும் ஒரே சூற்பை யினின்றும் வளரலாம்: அல்லது சூற்பைக்கு ஒன்ருக இரண்டு சூற்பைகளினிறும் வரலாம். இந்த இரண்டு முறையிலும் கரு உருவாவதைப்படம்(படம்-40)விளக்குகின்றது. உற்றுநோக் கித் தெளிவு பெறுக இவ்வாறு உருவாகும் குழவிகள் ஒரே கருப்பையில் தங்கிலுைம் இவைகளுக்கு இரண்டு தனி நஞ்சு கள் காணப்பெறும் இவை தனித் தனியான கருவிலிருந்து உற்பத்தியானதால் சாயலில் ஒன்றைப்போல் ஒன்று இருப்ப

80. சாதராண இரட்டைகள்-Normal twins. 81: *turriñsio @trilson Los Gir–Siamese twins. 32.5205 sq Qore solut—Identical twins;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/238&oldid=1285194" இலிருந்து மீள்விக்கப்பட்டது