பக்கம்:இல்லற நெறி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு $33

தும் இப் பெண் குழிமுயல் ஏழு குட்டிகளை ஈன்றது: "செயற் கைத் தாய்க் குப் பிறந்த இக் குட்டிகள் யாவும் நிறத்திலும் பிற சிறப்பியல்களிலும் தம்முடைய உண்மைப் பெற்ருேர் களே பொத்திருந்தன. அண்மைக்காலத்தில் இத்தகைய ஒரு சோதனை வெற்றிகரமாகப் பசுக்களிடம் மேற்கொள்ளப் பெற்றது. இதுகாறும் மனிதர்களிடம் இந்த முறையில் யாதொரு சோதனையும் மேற்கொள்ளப்பெற்றதாகத் தெரிய வில்ல்ை :

உடலுக்குப் புறத்தே உயிரியை உண்டாக்குதல்: உடலுக் குப்புறத்தே முட்டையணுக்களையும் விந்தணுக்களையும் ஒன்று சேர்த்துக் கருவுறச் செய்தல் சாத்தியப்படுங்கால், ஆய்வகத்தில் ஒரு முழு வளர்ச்சி பெற்ற உயிரியை உண் டாக்குதல் கூடுமா என்று உன் மனத்தில் ஐயம் தோன்ற லாம். அதனையும் தெளிவாக்குவேன். உண்டாக்குதல் முடியும்; எல்லாவிதப் பிராணிகளையும் அங்ங்ணம் பிறப் பிக்கச் செய்தல் இயலாது. பெண்ணுடலுக்குப் புறத்தே கருவுறல் நிகழக்கூடிய நீர்வாழ் பிராணிகளாகிய மீன், தவ ளைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றிடம் இவ்வாறு உயிரி களை ஆய்வகத்தில் உண்டாக்கலாம். இவ்வினங்களின் பெண் கள் முட்டைகளை இடுகின்றன. ஆண்கள் இம்முட்டைகளின் மிக அருகில் தம்முடைய விந்தனுக்களேச் சிந்துகின்றன. இந்தஇருபாலின் உயிரணுக்களும்(Sex elements).இவற்றைச் சூழ்ந்த ஊடகத்தில் சந்திக்கின்றன. இக் காரணத்தால் இவ்வகைப் பிராணிகளின் முட்டைகளையும் விந்தணுக்களே யும் ஒன்று சேர்த்து ஆய்வகத்தில் அல்லது இனம் பெருக்கும் தொட்டியில் பிராணிகளைப் பிறப்பிக்கச் செய்யலாம். வாணிகத்தின் நிமித்தம் ஒருவகை மீன்கள் பெரிய அளவில் இவ்வாறு உற்பத்தி செய்யப்பெறுகின்றன

மேலும் ஒருபடி முன்னேற்றம்: மேற்கூறிய முறையில் இன்று உயிரியல் அறிஞர்கள் மேலும் ஒருபடி முன்னேறியுள் ளனர். விந்தணுக்களின்றியே செயற்கை முறையில் முட்டை

56. aart-stb— Medium 57. இனம் பெருக்கும் தொட்டி-Breeding tank

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/339&oldid=598287" இலிருந்து மீள்விக்கப்பட்டது