உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

இல்லற நெறி


களைக் கருவுறச்செய்து ஒருசில பிராணிகளை உண்டாக்குவது சாத்தியமாகும் என்று அவர்கள் மெய்ப்பித்திருக்கின்றனர்! ஒருசில பிராணிகளின் முட்டைகள் விந்தணுக்களின் துணை யின்றியே கருவுறல்கூடும் என்பதை நீண்ட நாட்களாகவே அறிந்திருந்தனர். எடுத்துக்காட்டாக, தேனீக்களில் இராணி ஈ இருவிதமான முட்டைகளை இடுகின்றன. ஒருவகை கரு அறுபவை; மற்ருெரு வகை கருவுருதவை. இரண்டு வகை முட்டைகளும் ஈக்களாக முதிர்ந்து வளர்கின்றன. ஆனல் கருவுருத முட்டைகள் ஆண் ஈக்களையும் (சோம்பேறி ஈக் களையும்) கருவுற்ற முட்டைகள் உழைக்கும் ஈக்களையோ அல்லது இராணி ஈக்களையோ தருகின்றன. கருவுருமல் முட்டை வளர்வதை பார்த்தெகுே ஜெனிஸிஸ் அல்லது கன்னிப் பிறவி என்ற பெயாால் வழங்குவர் உயிரியல் அறிஞர்கள். இம்முறையில் பலவகைப் பிராணி ள் இனம் பெருக்குகின்றன. எனினும், பல அறிவியலறிஞர்கள் விந். தணுக்களின் துணையால் கருவுறும் முட்டைகளேயே அவர் நின் தலையீடு இன்றியே கருவுறும் செயலை வெற்றியுடன் கொண்டு செலுத்தியுள்ளனர். அவர்கள் விந்தணுக்களுக்குப் பதிலாக ஒரு சில பெளதிக-வேதியியல் துரண்டு பொருள் களைக்கொண்டு கருவுறும் செயலை முற்றுப் பெறச்செய் தனர்: ஜாக்ஸ் லோயப்" என்ற அமெரிக்க உயிரியலறிஞர் ஒருவகைக் கடல்வாழ் பிரானிகளின் முட்டைகள் உள்ள கடல் நீரில் ஒருவித திட்டப்படித் தொடர்ச்சியாகப் பல் வேறு வேதியியற் பொருள்களைச் சேர்த்து இம்முட்டைகள் பிராணிகளாக வளர்வதைத் தூண்டமுடியும் என்பதைக் கண்டார். உப்பு, ஆல்கஹால், ஈதர், குளோரோஃபார்ம், பொட்டாசி:ம் சயனைடு போன்ற சாதாரண வேதியியற் பொருள்களேயே அவர் கையாண்டார். அதன் பிறகு தவளை

58. சோம்பேறி ஈ-Irone. 59. tists; 3Gosoogsflatsi-Parthenogenesis: 60; so gifttušpo'-'Virgin birth.” . 6 1. gracio Gaon us!—jac ués Loeb. 63; Sea-urchins

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/340&oldid=1285242" இலிருந்து மீள்விக்கப்பட்டது