பக்கம்:இல்லற நெறி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்க 565

31

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

இணைவிழைச்சு: இந்த உலகில் புலன்களின் அடிப் படிையில் அதுபவிக்கக்கூடிய இன்பங்களில் த ைசிறந்தது முதலாவதாக நிற்பது-இணைவிழைச்சு ஆகும். இஃது அநுபவிக் குந்தோறும் புதிய புதிய உணர்ச்சிகளைத் தருவது. இதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும் தலைவன் கற்ருக.

அறிதோறும் அறியாமை கண்டற்ருல் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு:

என்று கூறியுள்ளார். அறிவிற்கெல்லையின்மையான் மேன் மேல் அறிய அறிய முன்னை அறிவு அறியாமையாய் முடியு மாறு போலச் செறிவிற் கெல்லையின்றி மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடிந்ததெனத் தன் ஆராமை கூறியவாறு” என்று பரிமேலழகரின் உரைப் பகுதியும் இவ்விடத்தில் எண்ணி எண்ணிமகிழத்தக்கதாகும். இத்தகைய இன்பத்தை நல்கும் இணைவிழைச்சின் இயல்பை யும், செய்முறையையும் அதன் பொறிநுட்பத்தையும் ஒவ் வொரு மணமக்களும் நன்கு அறிந்துகொள்ள வேண்டுவது மிக மிக இன்றியமையாதது. இவைபற்றிய கருத்துகளை இக் கடிதத்தில் கூறுவேன்.

உடல் முழுவதையும் ஆட்டிவைக்கும் விசை: புணர்ச்சித் துடிப்பும் புணர்ச்சியும் நடைபெறுங்கால் நம் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் செயற்படுகின்றது. நரம்பின் பொறி

&0$ @ær<£sogp4& — Coitus 31. குறள்-1110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/369&oldid=598353" இலிருந்து மீள்விக்கப்பட்டது