பக்கம்:இல்லற நெறி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

இல்லற நெறி


34

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனேயாகுக.

புணர்ச்சி நிலைகள்: காம நூலார் தம்பதிகள் கலவி புரிவதில் பல நிலைகளைக் கண்டறிந்துள்ளனர். இவை பால் துலங்களின் தன்மையையும் உறைப்பையும் பாதிக்கலாம். கலவிக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளக்கூடிய இந்த நிலைகளைப்பற்றிய அறியாமையே கலவிப் பொருத்தத் தடுமாற்றத்தின் காரணங்களுக்கும் சங்கடங்களுக்கும் அடிப் படையாக அமைகின்றது. எனவே, திருமணக்கலையைப் பற்றிய எந்தவித ஆராய்ச்சியிலும் புணர்ச்சி நிலைகளைப் பற்றிய ஆராய்ச்சியும் ஒரு முக்கிய பகுதியாக அமைகின் றது. இந்தக் கடிதத்தில் எல்லா நிலைகளையும்பற்றி குறிப் பிடுவதற்கு இடமும் இல்லை. பெரும்பாலான நிலைகளைப் பற்றிய முழுவிவரங்களும் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம் போன்ற நூல்களில் கண்டுகொள்ளலாம். முக்கியமான நிலை களில் ஒரு சிறு மாறுதல்களின் அடிப்படையிலேயே அவை பல்வேறு நிலைகளாக அமைகின்றன

வாத்ஸ்யாயனர் கூறும் கிலைகள்: மேல்நாட்டில் அறி வியல்' என்று குறிப்பிடப்பெறுபவையே நம்நாட்டில் சாத்திரம் என்று வழங்கப்பெறுகின்றது. ம னி த ன் ஆற்றும் செயலில் இந்தச் சாத்திரத்தைப் பயன்படுத்து வதையே அவர்கள் கலை என்று குறிப்பிடுகின்றனர். பண்டைய நூல்கள் முப்பத்திரண்டு சாத்திரங்களையும்

84. l jçxgřēà-~-Coital position 85. 9 sola?uá)—Science 86, 5%t-Art

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/406&oldid=1285271" இலிருந்து மீள்விக்கப்பட்டது