பக்கம்:இல்லற நெறி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

இல்லற நெறி


தம்பதிகளின் ஒற்றுமைக் கேட்டிற்கும் கொண்டு செலுத்தி விடுகின்றது என்பதையும் நீ உணர்தல் வேண்டும்.

உச்சநிலை உணர்ச்சித்திறனின்மை பெரும்பாலும் பெண் களிடமே காணப்பெறுகின்றது. இக்கூறினையுடையவர்கள் பல்வேறு கூறுகளில் குறையின்றிச் சாதாரணமாகவே காணப்பெறுகின்றனர். உச்சநிலை உணர்ச்சியிலும் பல்வேறு நிலைகள் உள்ளன. அது சாதாரணமாகச் சிறிதுகாலமாக நிஃத்து நிற்கும் உணர்ச்சியிலிருந்து மிகப் பெரிய உடல் அநுபவம் வரையில் தரத்திலும் உறைப்பிலும் காணப் பெறக்கூடிய ஒர் இன்ப உணர்ச்சியாகும். சில பெண்கள் ஒவ் வொரு கலவியிலும் திருப்தியான முறையில் உச்சநிலை உணர்ச்சியினை அடைகின்றனர். மற்றும் சிலர் மூன்று, நான்கு, அல்லது அதற்கு மேற்பட்ட புணர்ச்சிகளில் ஒரே தடவைதான் இவ்வுணர்ச்சியினப் பெறுகின்றனர்; வேறு சிலர் இவ்வுணர்வினைப் பெறுதலே அரிது; இன்னும் சிலர் புணர்ச்சியில் திருப்தியடையினும் இந்த எல்லையை எட்டிப் பார்க்காத நிலையிலே உள்ளனர். இவ்வுணர்ச்சி நிலையைப் பெறும் பெண்கள் எத்தனைபேர் என்பதைப்பற்றி மேனும் டா ஆராய்ந்து பல புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர். அவற்றை டிக்கின்சன், ஹிமில்ட்டன், போன்றவர்கள் எழுதியுள்ள நூல்களில் காணலாம்.

அடைய முடியாமைக்குக் காரணங்கள்: பெரும்பாலான பெண்களிடம் உச்சநிலை உணர்ச்சி நிலையை அடையும் தன்மையிராததற்குரிய காரணம்பற்றி இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. சிலர் பெண்ணின் உச்ச நிலை உணர்ச்சி ன்ங்கும் காணப்பெறும் ஒரு செயல் அல்ை வென்றும், புணருங்கால் பொதுவாகப் பெண் பிராணிகளி டம் இவ்வுணர்ச்சியே காணப்பெறுவதில்லை என்றும் கூறு கின்றனர். இவ்வுச்சநிலை உணர்ச்சியின் மறிவினை ஒரு சிறப்

33. 4.3 &&Grodår–Dickinson 34: stagińldet: l-estr–Himilton

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/440&oldid=1285289" இலிருந்து மீள்விக்கப்பட்டது