உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

இல்லற நெறி


தாம்; வாழினுந் திருவின்ரும்: அதனுற் கூடப்படாது என்பது

பூப்புமுதல் முந்நாள் புணரார்; புணரின்

யாப்புறு மரபின் ஐயரும் அமரரும்

யாத்த கரணம் அழியும் என்ப. எனப் பிறரும் ஒதினராகலான், அமையாதென்பது. நக் கீரரின் இந்த உரைப் பகுதியில்ை மாதவிடாயின் பொழுது இணைவிழைச்சே கூடாது என்பது பண்டையோரின் விதி என்பது ஒருவாறு தெளியப்பெறும். இன்னும் தொல் லாசிரியராகிய தொல்காப்பியரும்,

பூப்பின் புறப்பா உரறு நாளும்

நீத்தகன் றுறையர் என்மனர் புலவர்

பரத்தையிற் பிரிந்த காலை யான.' என்ற கற்பியல் நூற்பாவால் விதி செய்திருப்பதையும் காண்க. 'பரத்தையர் சேரியானுயினும் பூப்புத்தோன்றி மூன்று நாள் சழிந்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு. இதனுற் பயன் என்னயெனின், அது கருத்தோன்றும் காலம் என்க' என்று இளம்பூரணரும்: 'பூப்பின் முன்னுறு நாளும் பின்னு று நாளும் என்றும், பூப்புத் தோன்றிய நாள் முதலாகப் பன்னிரண்டு நாளும் என்றும், நீத்தல் தலைவன்மேல் ஏற்றியும், அகன்றலைத் தலைவிமேல் ஏற்றியும் உரைப்பாரும் உளர்...... பூப்புப் புறப் பட்ட ஞான்றும் மற்றைநாளும் கருத்தங்கில், அது வயிற்றில் அழிதலும் மூன்று ம் நாள் தங்கில் அது சில்வாழ்க்கைத் தாகலும்பற்றி முந்நாளும் கூட்டம் இன்று என்ருர்’ என்று நச்சினர்க்கினியரும் கூறும் விளக்க உரைகளாலும் இது நன்கு தெளியப்பெறும். இவ்விடத்தில் குடும்பக் கட்டுப் பாடுபற்றிக் கூறும்பொழுது கூடுபருவத்தை வரையறுத்துக் காட்டிய பகுதியில் கண்ட கருத்துகளுடன் இவ்வறிஞர் களின் கருத்துகளை ஒப்பிட்டு உணர்க. இன்று நடை

27. தொல்பொருள்-சந்: 46 (இளம்.) 28. இந்நூல்-பக்கம். (253.236)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/500&oldid=1285319" இலிருந்து மீள்விக்கப்பட்டது