பக்கம்:இல்லற நெறி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 49

முறையில் பெரும்பாலான சமூகங்களில் மாதவிடாய் ஆகி யுள்ள பெண்களைத் தனியாகவே ஒதுக்கி வைக்கின்றனர். விவிலிய நூலிலும் இவ்வாறு ஒதுக்கி வைக்கும் பழக்கம் குறிப்பிடப்பெற்றிருப்பதுடன், விலக்கான பெண்ணுடன் உறவு கொள்ளுதல் ஆபத்து என்றும், பாபம் என்றும் கூறப் பெற்றுள்ளது.

அறிவியலாரின் கருத்து: இனி, இன்றைய அறிவிய லாரின் கருத்தினை ஆராய்வேன். இன்று நாகரிக மக்கள் மாதவிடாய் ஆகியுள்ள பெண்ணிடம் யாதொரு குறிப்பிட்ட 'தாய்மையின்மை"யும் இருப்பதாகக் கருதவில்லை. சில ஆராய்ச்சியாளர்கள் பெண்களின் மாதவிடாய் ஒழுக்கில் சில நச்சுப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறிந்திருந்த போதிலும், மாதவிடாய் ஒழுக்கு ஒரு தொற்று என்று கருது வதே முடப்பழக்கத்தின் அறிகுறி என்று சிலரால் கருதப் பெறுகின்றது. நாகரிகம் அடைந்த சமூகங்களில் மாத விடாய் ஆகியுள்ள பெண்களைத் தீண்டாதிருத்தல் என்ற பழக்கமே மறைந்து விட்டது எனலாம்; அவர்கள் எல்லாச் சமூக உறவுகளிலும் பங்கு கொள்ளுகின்றனர், மாதவிடாய் ஆகியுள்ள பெண்களிடம் இணைவிழைச்சு புரிதலால் யாதொரு தீங்கும் இல்லை என்றும், அது விரும்பத் தகாத தன்று என்றும் பெரும்பாலோர் கருதுகின்றனர். எனினும், மாதவிடாயின்பொழுது பெண்களின் பாலுறுப்புகளில் மிக அதிகமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், இந்நிலை யில் பாலுறவு கொள்ளின் அதனல் ஒழுக்கு அதிகரிப்பதுடன் பெண்ணுக்கு அதிகமான அசெளகர்யங்களை விளைவிக்கும் என்றும் நாம் நினவிவிருத்துதல் வேண்டும். மேலும், காப் புறையை அணிந்து கலவி புரிந்தாலும், கலவிக்குப் பின்னர் ஆணின் சிறுநீர்ப் புறவழியில் சில சமயம் ஒருவித எரிச்சல் தோன்றுகின்றது. இது மாதவிடாய்க் கசிவுகள் இப்பாதை யில் நுழைந்ததல்ை உண்டாகியிருக்கலாம் என்று கருதப் பெறுகின்றது.

மேற்குறிப்பிட்ட மருத்துவக் காரணம் ஒருபுறம் இருக்க, அதிகமாக ஒழுக்கு இருக்கும் பொழுது புணர்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/501&oldid=598652" இலிருந்து மீள்விக்கப்பட்டது