பக்கம்:இல்லற நெறி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

இல்லற நெறி


அழகுணர்ச்சியையே பறிபோகச் செய்வதாகும் என்று பெரும்பான்மையோர் கருதுகின்றனர். அன்றியும், விலக் கானவர்களிடம் அதிக பால்விருப்பமும் இராது என்றும் ஒரு கருத்து நிலவி வருகின்றது. மாதத் தீட்டு’ என்பதே பெண்களால் உண்டாக்கப்பெற்ற ஒருவித ஏற்பாடு என்றும், கருவுறும் நிலைமையில்லாதபொழுது பெண் பிராணிகள் ஆண் பிராணிகளைக் கலவிக்கு ஏற்காதிருப்பது போன்ற ஒருவித நிலையே இதுவாகும் என்றும் பிரிஃபால்ட்: என்ற ர் அறிஞர் கருதுகின்ருர், ஆனால், ஒரு சில பெண்கள் மாதவிடாயின் பொழுது அதிகமான பால்விழைவினைக் கொண்டிருப்பது விதிவிலக்காகுமேயன்றி, அதனைப் பொது வாக எல்லோரிடமும் காணப்பெறும் இயல்பு என்று கருது வது கூடாது. ஆகவே, மாதவிடாயின்பொழுது உறவு கொள் வதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். இது தனிப்பட் டோரின் யோசனையையும் அவர்கள் மேற்கொள்ளும் முடி வினையும் பொறுத்ததாகும். பெரும்பான்மையான மருத்துவ அறிஞர்கள் இக்காலத்தின்பொழுது கலவி புரிதலால் தீங் கில்லை என்று கருதினும், அவர்கள் யாவரும் கலவி புரியா திருத்தலே விருப்பப்படுவது என்றும் கூறுகின்றனர். அதிக மான ஒழுக்கிருக்கும் பொழுது பால்துாண்டலே கூடாது என்றும் கருதுகின்றனர்.

கருப்ப காலத்தில் உறவு: பெண்களிடம் கருப்பகாலத் தில் உறவு கொள்வதைப்பற்றிய சில கருத்துகளையும் தெரி விக்க விரும்புகின்றேன். பெரும்பான்மையான பாலுண்ணி சளிடம் பெண் கருவுற்றதும் அஃது ஆணைப் பாலுறவிற்கு ஏற்பதில்லை அதனுடைய பால் செயல் கருப்ப காலத்திலும் குட்டிக்குப் பாலூட்டும் பருவத்தின் முதற்பகுதியிலும் நின்று போகின்றது. பழங்கால மனிதர்களிடமும் கருப்ப காலத்தி லும் குழந்தை பால் பருகும் பருவத்திலும் பாலுறவு கொள் வது தவறு என்ற பழக்கம் இருந்து வந்தது. பிரிஃபால்ட் என்ற அறிஞர் மாதவிடாயின்பொழுது ஏற்படுத்திய தடை

29. LoßLustgöll-Briffault.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/502&oldid=1285320" இலிருந்து மீள்விக்கப்பட்டது