பக்கம்:இல்லற நெறி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

இல்லற நெறி


அன்பினைந்தினை பெருந்திணை என மூவகையாகப் பகுத்துப் பேசுதல் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று மறையோர் தேசத்து மன்றல் எட்டு வகையாகப் பகுத்து உரைக்கப்பெறும். பிரமம் என்பது, நாற்பத்தெட்டி பாண்டு பிரம்மச்சரியம் காத்தாற்குப் பன்னிரண்டு வயதுப் பருவமுள்ள கன்னியை அணிகலன் அணிந்து கொடுப்பது. அரசாபத்தியம் என்பது, மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்ருல் மறுக்காமல் கொடுப்பது ஆரிடம் என்பது, காளை பசு ஆகிய இரண்டின் கொம்புகளுக்கும் குளம்புகட்கும் பொற்பூண் அணிந்து அவற்றின் நடுவில் மண மக்களை நிறுத்திப் பொன்பூட்டி நீவிரும் இவைபோலப் பொலிந்து வாழ்வீராக’ என நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுப்பது, தெய்வம் என்பது, வேள்வி செய்த ஆசிரிய னுக்கு வேள்வித் தி முன்னர் கன்னியைக் காணிக்கையாகக் கொடுப்பது காந்தருவம் என்பது, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட இடத்தில் கூடிப் பிரிவது. அசுரம் என்பது, கொல்லும் இயல்பினையுடைய எருதினை அடக்கியவன் இப் டுபண்ணை மணத்தற்குரியவன், வில்லேற்றினன் இவளே மனத்தற்குரியவன், இன்னதொரு பொருள் தந்தான் இவளை மனத்தற்குரியவன் என இவ்வாறு சொல்லிச் சொல்விய வண்ணம் செய்தாற்குப் பெண்ணைக் கொடுப்பது, இராக் கதம் என்பது, தன்னல் விரும்பப்பட்ட பெண்ணே அவள் விரும்பாமலும் பெற்ருேர் கொடாமலும் வலிதிற் கவர்ந்து செல்வது. பைசாசம் என்பது, மூத்தாள் துயின்ருள் கள்ளுண்டு களித்தாள் ஆகியோரைக் கூடுவது. இவ்வெட்டு மணங்களையும் முறையே அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள் வினை நிலை, இராக்கதம், பேய்நிலை என வழங்குவர் இறையனர் களவிய லுரையாசிரியர். இவற்றுள் முதல் நான்கும் ஆரிய பிராமண ருக்கும், அசுரமும் இராக்கதமும் பெரும்பாலும் அரசர்க் கும், பைசாசம் சூத்திரர்க்கும், காந்தர்வம் எல்லார்க்கும் உரியனவாகக் கூறப்பெற்றுள்ளது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/532&oldid=1285335" இலிருந்து மீள்விக்கப்பட்டது