உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵9 அறிவியல்டிப்படையில் திருமணம்

இந்தப் பையின் கீழும் இந்தப் பைக்கும் மலக்குடலுக்கும் இடையிலும் உள்ள பல உறுப்புகள்தாம் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியாகும். சிறுநீர் மண்டலத்திற்கும் பிறப்புறுப்புகளுக்கும் பிரத்தியேகமான தொடர்பு மனித னிடம் அமைந்துள்ளது. உடலுறுப்பியல் முறையில் சிறுநீர் உறுப்புத் தொகுதியும் பிறப்புறுப்புத் தொகுதியும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. பெண்ணுடன் இணைக்கும் உறுப்பாகிய ஆண்குறி' யின் பெரும்பகுதி நெடு கவும் அமைந்திருக்கும். சிறுநீர்ப்புறவழி சிறுநீர்மண்ட லத்தின் புறவாயிலாகும்; அது சிறுநீரை வெளிப்படுத்துவ துடன் புணர்ச்சியின் பொழுது உண்டாக்கும் விந்துவையும வெளியிற் கொண்டு வருவதற்குத் துணையாக இருக்கின்றது. இந்த இரண்டு மண்டலங்களுடன் நெருங்கிய தொடர், புடைய வேறு உறுப்புகளும் உள்ளன. அவை புராஸ்டேட் சுரப்பில், விந்துப் பை' என்பவை. இவற்றைப் பின்னர் விளக்குவேன்.

விந்துப் பாய்மம்: புணர்ச்சியின் பொழுது வெளிப்படும் விந்து என்பது என்ன, அஃது எப்பொருள்களால் ஆனது, அப் பொருள்கள் எங்கெங்கிருந்து வருகின்றன என்பதை அறிந்துகொள்ள அவாவுடையவனாக இருப்பாய் என்றுகருது கிறேன். அதை முதலில் நன்கு தெரிந்துகொள்ளவும் வேண் டும்; விந்துவிலுள்ள முக்கிய பகுதி விந்தனுக்களே. ஆனல் விந்துவின் பெரும் பகுதி புராஸ்டேட் சுரப்பி, விந்துப் பைகள் ஆகிய இரண்டிடங்களிலிருந்தும் உண்டாகும் சுரப்பு நீர்களேயாகும்?. புணர்ச்சியில் விந்து வெளியாகுங்கால் இந்தச் சுரப்பு நீர்கள் ஒருங்கு சேர்ந்து விந்துவாக வெளி யேறுகின்றன;

17. Q&#65th 2-gyull—Copulative organ. 18. g&ŵr@ flŷ–Penis. 19. LigitsioGl-lt. &rillo-Prostate gland. 20: estŘgili snu–Seminal vesicle. 21. #gridij šíř–Secretion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/85&oldid=598922" இலிருந்து மீள்விக்கப்பட்டது