பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இளைஞர் தொலைக்காட்சி உறைப்பினைப் பொறுத்தது. ஆகவே, பிம்பம் முழுவதும் ੰ துடிப்புப் படமாக மாற்றப்பெறுகின்றது. இந்தத் துடிப்புப் படம் உறைப்பில் பல்வேறு வேறுபாடுகளை யுடைய மிக நுண்ணிய மின்சாரத் துடிப்புக் களைக் கொண்ட ஒரு பெரிய தொகுதியாகும். இந்த மின்சாரப்படம்” அதன் மிக அருகி லுள்ள உலோகத் தட்டினுக்கு மாற்றப் பெற்று, அங்கிருந்து ஆயிரக்கணக்கான மடங்கு உறைப்பாகச் செய்யப் பெற்று, அதன் பின்னர் வானி (Ether) வழியாக நமது தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அனுப்பப்பெறுகின்றது. நான்காம் நிலை: ஆல்ை, வானிவழியாக அனுப்பப் பெறும் மின்சாரப் படம் பல்லாயிரக் கணக் கான படங்களில் ஒன்றே ஒன்றுதான். அசை யும் படம் ஒன்றின நாம் பெற வேண்டு மாயின் திரையின்மீது ஒவ்வொரு விடிை யிலும் தம்மில் சிறிது சிறிது வேறுபாடுக ளுள்ள இருபத்தைந்து அல்லது முப்பது படங் கள் விழச் செய்யவேண்டும் என்பதை நாம் அறிவோம். நம்முடைய கண்களோ அவ் வளவு விரைவாக ஒவ்வொரு பிடத்தையும் தனித்தனியாகக் காணமுடியா. ஆகவே, நாம் ஓர் அசையும் படத்தைக் காண்கின்ருேம்.