பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இளைஞர் தொலைக்காட்சி கின்றது. அஃதாவது, மின்னேட்டம் இப்பொழுது அதிகமாகின்றது. கருவியிலுள்ள முன் பக்கத் தகடு முன்பக்கமாக விலகும்பொழுது இதற்கு எதி ரிடையான நிகழ்ச்சி ஏற்படுகின்றது. அஃதாவது, பேசுவோரின் வாய்புறத்துத் தகடு முன்பக்கமாக அதிர்ந்து ஆடுங்கால் அதற்குப் பின்பக்கத்திலுள்ள கார்பன் துகள்கள் நெகிழ்கின்றன ; இப் பொழுது அவற்றின் அழுத்தமும் குறைகின்றது. இப்பொழுது மின்னேட்டமும் குறைகின்றது. எனவே, கம்பிகளில் ஒடும் மின்னேட்டத்தின் வன்மையும் மென்மையும் இந்தத் தகட்டின் அதிர்வு களைப் பொறுத்துள்ளன. இத்தகைய அமைப்பி ல்ைதான் வானெலியும் தொலைக்காட்சியும் செயற் படுகின்றன. - - - --- . - - தொலைக்காட்சி நிலையத்தில் ஒருவர் பாடுவதாக அல்லது நாட்டியம் ஆடுவதாகக் கருதுவோம். அவ ருடைய பிம்பங்களைத் தொலைக்காட்சிக் காமிரா எவ்வாறு படங்களாக எடுத்து வானி வழியாக அனுப்புகின்றது என்பதை அறிவோம். அங் நனமே, பாடகரின் குரல் ஒலி அல்லது நடனமாடு வோரின் ஒலி ஒலிவாங்கியின்மூலம் ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றது. இந்த ஒலி அதிர்வுகளை ஒலிவாங்கி மின்அதிர்வுகளாக மாற்றுகின்றது. இந்த மின்அதிர்வுகள் பல மின்னணுக் குழல் களால் வன்மையாக்கப்பெறுகின்றன. அதன்