உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

5. மலைகளும் காடுகளும்



மனிதர்கள் இன்றி மரங்கள் வளர்கின்றன. ஆனால் மரங்கள் இன்றி மனித இனம் வாழ, வளர முடியாது. தேவையான உணவு. உடை, உறைவிடம், பெற அடிப்படைக் காரணம் மலைகளும் மலைகளைச் சார்ந்து காடுகளில் காணப்படும் இயற்கைச் செல்வங்களான மரங்களே. மலைகளும் மலைசார்ந்த இடங்களும் காடுகளைச் சுமந்து நிற்கின்றன. மரங்கள் அடர்ந்த காடுகள் வெள்ள அரிப்பைத் தடுக்கின்றன. நாட்டின் இயற்கைப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.

நிலத்தில் பெரும்பகுதி காடாக இருந்தபோது வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் வழிகள் ஏற்படுத்தவும் ஏரி, குளம் அமைக்கவும் தேவைகளுக்கேற்ப மட்டுமே காடுகளை அழித்தனர்.

"காடுகொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கி
கோயிலொடு குடி நிறுவி"

என்பது சங்க இலக்கியத் தொடர். தேவைக்கு அழித்தன போக எஞ்சிய காடுகளைப் பாதுகாத்தனர். "உசிர் உள்ள மரங்களை வெட்டக் கூடாது" என ஒரு அரசன் ஆணையிட்டான். "தோப்பில் உள்ள மரங்களுக்குத் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் வரும்" என்பது ஒரு கல்வெட்டுத் தொடர். இறைவனோடு இறை ஆலயத்தில் உள்ள 'தல விருட்சங்களும்' வணங்கத்தக்கன என்பதால் மரங்களின் புனிதம் விளங்கும்.

ஈரோடு மாவட்ட வனப்பருதிகளில் முதலில் கவனம் செலுத்தியவர் திப்பு சுல்தான். சந்தன மரங்களை அரசு மரங்கள் (Royal Trees) என்று அறிவித்து அவற்றைப் பாதுகாக்க உரிய அதிகாரிகளை (NAYAKS) நியமித்தார்.

1799இல் ஈரோடு மாவட்டப் பகுதியில் கும்பினியார் அதிகாரத்திற்கு வந்தாலும் 1850 வாக்கிலேயே காடுகளின் மீது அக்கறை செலுத்தினர். நாடு முழுவதும் இரயில் பாதைகள் அமைக்கத் தொடங்கிய