உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஈரோடு மாவட்ட வரலாறு


அவற்றில் இடம் பெற்றிருந்தன. சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட மாவட்ட வரலாறுகளில் சுவையான பல்வேறு செய்திகள் சிறந்த முறையில் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவை மிகச்சுருக்கமாகவும் துணுக்குச் செய்திகளின் இணைப்பாகவே இருந்தன. இவ்விரண்டு வரிசைகளிலும் தொல்லியல், ஆவணங்கள், இலக்கியச் செய்திகள் போதுமான அளவு இடம் பெறவில்லை.

ஆனந்த விகடன் வெளியிட்ட மாவட்ட மலர்களில் வாசகர்களைக் கவரும் வண்ணம் சுவையான செய்திகள் இடம் பெற்றிருந்தாலும் தொடர் வரலாறுகளாக அவை அமையவில்லை.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை மாவட்டம்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் நடத்தினர். சில தலைப்புகளே அவற்றில் இடம்பெற்றன. ஓரிரு மாவட்டக் கருத்தரங்குக் கட்டுரைகள் மட்டுமே நூல் வடிவம் பெற்றன. அவற்றிலும் வரலாறு முழுமையாக இல்லை.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை பல மாவட்டங்களுக்குத் தொல்லியல் கையேடுகள் வெளியிட்டுள்ளனர். சிறந்த அம்முயற்சியில் பிற வரலாற்றுச் செய்திகள் அதிகம் இடம் பெறவில்லை.

மேற்கண்ட அனைத்து முயற்சிகளிலும் ஒரு மாவட்டத்தின் பன்முக மாட்சிகளைக் கூறும் முழுமையான வரலாறு வெளிப்படவில்லை. இக்குறையைப் போக்கும் வண்ணம் நவீன இலக்கிய உலகின் விடிவெள்ளியாகத் திகழும் சென்னை 'அம்ருதா' பதிப்பகத்தினர் அந்தந்த மாவட்டங்களைப் பற்றி ஓரளவு அறிந்த - புரிந்த - தெரிந்த அன்பர்களைக் கொண்டு மாவட்ட வரலாறுகள் தொகுக்க முன்வந்தனர். சில மாவட்ட அன்பர்கட்கு மாவட்ட வரலாறு எழுத வேண்டுகோளும் விடுத்தனர்.

‘ஈரோடு மாவட்ட வரலாறு' எழுதும் பணி எனக்கு அளிக்கப்பட்டது. என் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேவையான விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. அதே சமயம் தருந்த ஓய்வு கிடைத்ததால்தான் ஓரளவேனும் இப்பணியை மேற்கொள்ள