பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

7


முடிந்தது. இந்நூல் தொகுக்கும் பணிக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் அம்ருதா பதிப்பகத்தினரும், அம்ருதா இதழின் சிறப்பாசிரியர் திருமதி. திலகவதி இ.கா.ப, அவர்களும் ஆவார்கள். அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலம் இராசாசுவாமி நற்பணிமன்றம் அமைத்து "வெள்ளோடு காணியாளர்கள் வரலாறு" வெளியிட்டு, காலிங்கராயன் சிலை அமைத்து இராசா சுவாமி கோயில் திருப்பணிக்கும் குல ஒற்றுமைக்கும் பாடுபட்டு வரும் தலைவர் திரு. N.T. கண்ணுசாமி அவர்களும், நற்பணி மன்ற முக்கிய உறுப்பினர்களுள் ஒருவருமான ஈரோடு கட்டிட ஒப்பந்தக்காரர் திரு. R.P. பெரியசாமி அவர்களும் இந்நூலைத் தாங்களே வெளியிட வேண்டும் என விரும்பினர். என் மக்களும் குடும்பத்தினரும் 'கொங்கு ஆய்வு மையம்' பெயரில் இந்நூல் வெளியிடுவது நல்லது என்று கூறினர்.

ஒரு நாட்டு வரலாறுக்குள்ள பல கூறுகளுடன் ஈரோடு மாவட்டத்தின் இன்றியமையாச் சிறப்புச் செய்திகள் அனைத்தும் இயன்ற வரை இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கால வளர்ச்சிக்கு ஏற்ப சில செய்திகளில் குறை இருக்கலாம்; அல்லது விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் சுட்டிக் காட்டினால் அடுத்த பதிப்பில் அவை திருத்தம் பெறும்.

தகவல்கள் அளித்த துறைகள், அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. கள ஆய்விலும், தகவல் திரட்டுவதிலும் உடனிருந்து உதவியவர் செவாலியர் டாக்டர் கொங்கு என். கொளந்தசாமி அவர்கள். அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

பொதுவாக என் ஆய்வில் அக்கறை செலுத்தும் என் மனைவி கௌரி, மக்கள் இரா, ஜெயப்பிரகாஷ், இரா. செந்தில்குமார், இரா. ஜெயமோகன் மற்றும் குடும்பத்தினர் 'ஈரோடு மாவட்ட வரலாறு' தொகுப்பதில் பேரார்வம் காட்டினர்.

மாவட்ட வரலாறாக இருப்பதால் மாவட்ட ஆட்சியரிடம் அணிந்துரை பெற வேண்டும் என்று விரும்பினேன். தமிழியல் ஆர்வலர், நூல்