பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 பேராசிரியர் சீகண்டையா ஒரு கன்னடப்பிராமணர். இவரேனும் ஒரு திராவிட மொழிப் பெரும் புலவர். என் திராவிடமொழி யாராய்ச்சித் துறை யொடு தொடர் புள்ளவர். வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுநரான சட்டர்சிக்கும், கொங்கனியிலும் சமற்கிருதத்திலும் வன் புலவரான கத்தரேக்கும் தமிழொடு என்ன தொடர்பு? ஆரியமொழிகட்குள் மட்டுமன்றி இந்திய மொழிகட்குள் ளும் சமற்கிருதத்தைத் தலைமையாகக் கொண்ட இவ்விரு வரொடும், (தமிழைத் தலைமையாகக் கொண்ட) நான் விரைந்து முட்டுவேன் என்பதும், அதனால் என் பணி முட்டுப்படும் என்பதுமே, இவ்விருவரையும் முறையே மேற்பார்வைக் குழுத்தலைவராகவும் துணைத் தலைவர் போன்றும் அமர்த்தியவர் எதிர்பார்த்தவை. அவ்வெதிர் பார்ப்பு அண்மையிலோ பின்னரோ நிறைவேறும் என் பதும் எனக்குத் தெரியும், - பேராசிரியர் சேது இலக்கணப் புலமை யில்லாதவர். இலக்கியப் புலமையும் பெரும்பாலும் பதவிக்கு வந்தபின் பெற்றவர்; தனித்தமிழ்க் கொள்கையற்றவர்;வழக்கறிஞர். பேராசிரியர் தெ. பொ. மீ. சென்னைவாணர்; சென் னைத் தமிழையன்றிப் பாண்டி நாட்டுத் தமிழையறியா தவர்; வேதாந்தியர்; (இரண்டன்மைக் கொள்கையர்); வையாபுரி வழியினர்; வழக்கறிஞர்; பேராயக்கட்சியர்; தமிழாராய்ச்சி நிரம்பாதவர்; சமற்கிருதத்தைத் தலைமை யாகக் கொண்டவர்; (ஆயினும் பேராசிரியர் சேது போலாது தம் கொள்கையை வெளிப்படையாய்க் கூறு பவர். திரு. வையாபுரி போன்றே பெரும்புலமை பெற் றவர். தனித் தமிழ்க் கொள்கையும் குமரித் தமிழ் நம்பிக் கையும் அற்றவர். குழுவாருள் தமிழ்ப் பற்றுள்ள பிற உறுப்பினரோ, பெரும் பதவியும் செல்வாக்குமுள்ள பிரா மணரையும் சமற்கிருதப் பேராசிரியரையும் காணின்,