பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக் கின்றவர். ஓரிருவர் அங்குமிங்கும் சாரும் இருதலை மணி யார்; எதற்கிணங்கியும் பதவியை இறுகப் பற்றிக்கொள் பவர். அண்ணாமலைப் பல்கலைக் கழக அதிகாரிகளோ அரசியலாரைத் தழுவியும் வருவாயைக் கவனித்தும் ஒழுக வேண்டியவர். இந்நிலையில் அண்ணாமலை நகர் செல்வதா இல்லையா என்று மீண்டும் சூழ்வு பிறந்தது. என் நண்பரெலாம் செல்லவே தூண்டினர். எனக்கு அகவை அன்று 54. "அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் அகவை. அதற்கு மேல் ஓராண்டு நீட்டிப்புக் கிடைக்கலாம். ஆகவே, ஈராண்டிற்குமேல் இச் சேலங் கல்லூரியில் இருத்தல் இயலாது. அண்ணாமலை செல்லின் ஐந்தாண்டேனும் ஈராண்டேனும் அலுவலிருக்கும். அதற்குள் தமிழ் வேர்ச் சொல் அகரமுதலியையும் ஒருவாறு தொகுத்து விடலாம். அதன்பின் வேலை இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி” என்றிவ்வாறு எண்ணிச் செல்லவே துணிந்தேன், என் உண்மை நண்பரும் "நீங்கள் திராவிட மொழியாராய்ச் சிக் குழுவில் செயலாளராக விருப்பதால், இடர்ப்பாடுகள் நேரினும் எதிர்த்துக் கொண்டு சமாளிக்கலாம்” என்று ஊக்கினர். பணிசெயற்படலம் முதற்பகுதி நான் சேலங் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனும் பேராசிரியனுமாயிருந்தபொழுது, 1956-ஆம் ஆண்டு 6-ஆம் மாத இறுதியில், 26-6-1956 என்னும் பக்கல் (தேதி) இட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவா ளர் திரு. மீனாட்சிசுந்தரனாரிடமிருந்து எனக்கு வந்த அமர்த்தோலையில், பல்கலைக்கழக ஆசிரிய வூதியம் பற்றிய நெறிகட்கு உட்பட்டு, 270-25-500 உருபா என்னும் சம்பளத் திட்டத்தில் மாதத்திற்கு 250 உருபா உம் அரசியலார் விழுக்காட்டுப்படி அருந்தற்படியும் ReliIRE GUST