பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 பழம் பிராகிருதங்களாகவும், அதன்பின் இற்றை மொழி களாகிய புதிய இந்தாரிய மொழிகளாகவும் பெயர்ந்தது”. பர். சட்டர்சி தலைமையுரை, (பக்கம் 18, 19). இக் கருத்துக்களைக் காணின், அண்மையில் நீலகண்ட (சாத் திரியார்) 'தமிழ் வரலாறும் பண்பாடும்' என்னும் நூலில் தமிழரைத் தாழ்த்திக் கூறியிருப்பது புதுமையாகத் தோன்றாது. ஏற்கனவே 1952-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட 'நந்த மௌரியர் காலம்' (Age of the Nandas and Mauryos) என்னும் தொகுப்பு நூலில், பர். சட்டர்சி பர். இராகவனுடன் இணைந்தெழுதிய மொழி யிலக்கியப் பகுதியில், இக் கருத்துக்களே கூறப்பட்டுள் ளன. 1955-இல் வெளிவந்த 'தென்னிந்திய வரலாறு' (A History of South India) என்னும் (பேரா. நீலகண்ட சாத்திரியார் எழுதிய) நூலிலும், தமிழர் தாழ்த்தியே கூறப்பட்டுள்ளனர். ஆயினும் என்னைத் தவிர வேறொரு வரும் எதிர்க்கவில்லை. மூவகைக் காப்பாருள் வந்தபின் காப்பாராகக்கூடத் தமிழர் இல்லை; வந்தபின் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் அளவின ராகவே யுள்ளனர். அதுவும் விரல் விட்டெண்ணத்தக்க ஒரு சிலரே. பைர். சட்டர்சி தலைமையுரையில், தமிழுக்கு மிகக் கேடானதும் அவரையும் மிக இழிவு படுத்துவதுமான செய்தி எதுவெனின், ஸ்த்ரீ என்னும் வடசொல் 'தி' என்னும் பெண்பாலீறாகத் திரிந்தமைந்தது என்பதே. * பத்தாண்டிற்குமுன், இப்பொருள் பற்றிய கட்டுரை மதுரைக் கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்ததாகச் சொல்லப்பட்டது. நான் அதைச் 'செந்தமிழ்ச் செல்வி யில் மறுத்தேன். ஆதலால், அதோடு அது நின்று விட்டதென்று கருதினேன். ஆயின்,பர், சட்டர்சி இந் தியச் சமற்கிருதக்குழுத் தலைவராய்த் தமிழ்நாடு வந்த பொழுது, அது மீண்டும் புத்துயிர் பெற்றெழுந்துவிட்டது.