பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விட்டுவிடலாம். பின்பு, முதற்கண் நண்ணிலக் கடற் கரைவாணராயிருந்தவரும் கிரேக்க நாட்டிலும் அதைச் சேர்ந்த தீவுகளிலும் மேலைச் சின்ன ஆசியாவிலும், எல் லெனியமுன்னை ஆயேகிய நாகரிகத்தை அமைத்தவ ரொடு தொடர்பு கொண்டவருமாகச் சிலரால் நம்பப்படு கின்ற (இதுவே என் கருத்தும்) திராவிட மொழியாளர் வந்தனர். அதன்பின், சீன திபேத்திய மொழிகளைப் பேசம் கிராதர் அல்லது மங்கோலியர், இந்திய மாந்த னின் அமைப்பில் மூன்றாம் பெருங்கூறாய் வந்தமைந் தனர். ஆயின், அவர்களின் செல்வாக்கு தெக்காணத் திற்குத் தெற்கே சென்றதாகத் தெரியவில்லை. இறுதி யாக, நம் ஆரியர் வந்து, இந்திய நாகரிகத்தை முற்று வித்து, அதன் அமைப்பிற்குச் சமற்கிருதம் ஆகிய முதன் மையான வெளியீட்டு வாயிலைத் தந்துதவினார்கள், அவர்கள் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக அல்லது ஆளும் இனமாக வந்து, தமக்கு முந்திய இனத் தாரையெல்லாம் மேற்கொண்டார்கள். ஆயின், கிரேக்க நாடு தன்னைச் சிறைபிடித்தவரைச் சிறை பிடித்த நிலைமை இந்தியாவிலும் ஏற்பட்டது. ஆரிய மொழி, நிசாத அல்லது ஆத்திரிய மொழிகளும் சீன-திபேத்திய மொழிகளும் திராவிட மொழிகளும், பேசிய மக்கள் பக்கம் பக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த வட இந்தியாவில், உள்ள மொழிக் குழப்பத்திலும் முரண்பாட்டிலும், ஒன்று படுத்தி யிணைக்கும் கருவி என ஆயிற்று. வட இந்தியா வில் ஆரிய முன்னை மக்களால் ஏற்கனவே ஏற்பட்ட மொழிக் குழப்பத்தில் ஆரிய மொழிக்கு அதன் பெரு வாய்ப்பிருந்தது. பெருந்திரளான வட இந்திய மக்கள் ஆரிய மொழியை ஏற்றுக்கொண்டு, அதைத் தங்கள் தேவைக்கேற்பச் சரிப்படுத்தும் நிலையில் அதைப் பெரி தும் மாற்றினார்கள். அதனால், அது வேத மொழியிலி ருந்து இலக்கியச் சமற்கிருதமாகவும் அதே சமயத்திற்